பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 49

கொல்லென்று சிரித்தார்கள். இயக்குநர் திலகமாகிய நானும் சிரித்தேன். பிறகு சிந்தித்தேன். வாய் தவறி வந்த வசனமே அரங்கேற்றத்திலும் இருந்தால் என்ன என்று யோசித்தேன். அதே மாதிரி ஆண்டு விழா நாடக மேடையில் பாண்டியன் வடை கொடு தாயே! என்று அமர்க்களமாகப் பேசினான். அவ்வளவுதான்... பள்ளிப் பிள்ளைகளும் பெற்றோர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். நாடகம் முடிந்ததும் பாண்டியனை யார் யாரோ வந்து ஆரத்தழுவினார்கள். வடை பாயசத்தோடு ஒரு விருந்தைச் சுவைத்தது போல் அனைவரையும் மகிழ வைத்த அந்த மாணவனைப் பாராட்டவில்லையென்றால் கலைத்தாய் கண்ணிர் வடிக்கமாட்டாளா?

பிழைபடப் பேசும் பாத்திரம் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. ஷெரிடன் நாடகம் ஒன்றில் 'மலப்பிராப்' என்று ஒரு சீமாட்டி வருகிறார். ‘இவர் என் காதலன்' என்று சொல்ல வேண்டியிருந்தால் 'இவன் என் காதகன் என்று சொல்வார்.

I have two windows in my room graśrugs); I have two widows in my room என்றானாம் ஒருவன். அந்தமாதிரி அந்த சீமாட்டி எதையும் மாற்றிப் பிழைபடப் பேசுவார். அந்தச் சீமாட்டி தம் நினைவாக 'மலப்பிராபிசம்' (MALAPROBISM) என்று ஒரு வார்த்தையை ஆங்கில அகராதிக்கு வழங்கியிருக்கிறார். காப்பிடலிசம், சோசலிசம், அண்ணாயிசம் போல அந்தச் சீமாட்டி செய்த பிழைகள் உலகத்துக்கு ஒரு புது இசத்தைத் தந்திருக்கிறதே... அவரைக் கோயில் கட்டிக் கும்பிடத்தான் வேண்டும்! -

ஒருமுறை ஐன்ஸ்டினிடம் 'உங்களுடைய சார்பியல் Gémilumulanl (THEORY OF RELATIVITY) assianulums