பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tBgn & 71

குழந்தை ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் அகில முழுதும் கட்டி ஆள்வான்' என்றாராம். இதைக் கேட்ட கமலவதி பல்லைக்கடித்துக் கொண்டு கால்களைக் கட்டிலில் தூக்கி வைத்துக்கொண்டு அடக்கியிருந்தாளாம். ஒரு நாழிகை கழித்துப் பிள்ளை பெற்றாளாம். வயிற்றில் கூடக் கொஞ்சநேரம் இருந்ததால் சிவந்த கண்களை உடையதாய்ப் பிறந்த குழந்தையைப் பார்த்து 'என்கோ, செங்கண்ணனோ என்று கூறிக்கொண்டே உயிர் விட்டாளாம். -

இது முடியுமா, முடியாதா என்று மருத்துவர்கள்தான் கருத்துக் கூறமுடியும். அவள் உடனே இறந்து விட்டதாகச் சொல்வதால் ஒருவேளை நடந்திருக்கவும் கூடும். அது நடந்திருக்குமோ என்னவோ அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடுகிற காரியத்தைத் தென் கொரியா நாட்டுத் தாய்மார்கள் சிலர் செய்திருக்கிறார்கள்.

பொதுவாக 12 வாரம் வரைதான் ஆபத்து அதிகமில்லாமல் கருச்சிதைவு செய்துகொள்ளக் கூடிய காலம்... ஆனால் பொருளுக்கு ஆசைப்பட்டு, 20, 21 வாரங்கள் வளர்ந்த நிலையில் கருவைச் சிதைப்பது உயிரைக் குடிக்கும் செயல் -

இது தெரிந்தும் வேண்டியபோது பிள்ளையைப் பெற்று விட்டுப்போன சோழ அரசி போல வேண்டியபோது பிண்டத்தைக் கொடுக்க கொரியப் பெண்கள் சிலர் தங்களைக் கெடுத்துக் கொள்கிறார்கள்! ஆமாம்..... உயிருக்குக் கேடு தேடிக் கொள்கிறார்கள்!

அமெரிக்காவில் உள்ள இராணுவ சோதனைச்சாலைக்கு அதன் நிர்வாகம் கேட்கும் பக்குவத்தில் கருச்சிதைவு செய்துகொடுக்க கொரியாத் தாய்மார்கள் சிலர் ஒப்புக் கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை ஒரு