பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్ర இந்தப் பக்கம் & 78

நாவல் என்று வாசகர்கள் நெருங்கி வரத் தயங்குவதாகத் தெரிகிறது. ஜில்ஜில் ராணி என்று பெயர் வைத்திருந்தால் இந்நேரம் ஒடோடி வந்திருப்பார்கள்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது பர்மாவைவிட்டுத் தாயகம் திரும்பிய குடும்பங்களுள் எங்கள் குடும்பமும் ஒன்று. சின்ன வயதில் என் அண்ணனோடு பர்மியப் பள்ளி ஒன்றில் நானும் சேர்ந்து படித்திருக்கிறேன். பள்ளியில் 'மெள மெள என்று எனக்குப் பெயர் இருந்திருக்கிறது. பர்மாவைவிட்டு வெளியேறியபோது என் பாட்டிக்குப் பரமதிருப்தி. 'ராஜேந்திர பிரசாத்' என்று மாமா வைத்த அழகான பெயரை பாவிப்பயல் பர்மாக்காரன் மாற்றப் பார்த்தானே.... நல்ல வேளை, என் பேரனைக் காப்பாற்றி விட்டேன்' என்று பின்னாளில் என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என்பாட்டி மறைந்த பிறகு 'மெள மெள என்ற அந்தப் பெயரின் மீது எனக்கு ஒரு பற்றுதல் ஏற்பட்டிருக்கிறது. அடடா, இவ்வளவு காலம் இந்தப் பெயரைப் புறக்கணித்துவிட்டோமே. கைவசமுள்ள ஐந்தாறு புனை பெயர்களும் உள்நாட்டுப் பெயர்களாக உள்ளனவே.... இப்படி ஒரு வெளிநாட்டுப் பெயர் இருந்தும் விட்டு விட்டோமே என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

என் அடுத்த கவிதைத் தொகுப்பை 'மெள மெள என்ற பெயரில் வெளியிட்டால் என்ன என்றும் யோசிக்கிறேன். காலத்தை வென்று நிற்பவை மாவோ கவிதைகளா, மெள மெள கவிதைகளா என்று பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு நான் ஒரு நல்ல தலைப்பைத் தந்த புண்ணியத்தைத் தேடிக் கொள்ளலாமல்லவா? -