பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் & ஐ

இருக்கிறது... அதை மாற்றப் போகிறேன். வேறு ஒரு நல்ல பெயர் சொல்லுங்கள் என்றார்... நண்பரின் காதலியை ஆளாக்கிய பெற்றோர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை மனதுக்குள் தெரிவித்துக் கொண்டு, உங்கள் காதலி எப்படி இருப்பாள் என்று கேட்டேன். 'தேவதை மாதிரி இருப்பாள் என்று அவர் வாயில் தேனொழுகச் சொன்னார். அப்படியானால் தேவதை' என்றே பெயர் வைத்துவிடுங்கள் என்றேன். நண்பர் பூரித்துப் போனார். சரித்திர காலத்திலிருந்த நண்பரின் காதலியைப் புராண காலத்துக்கு அனுப்பிய எனக்கு நானே ஒரு சபாஷ்' சொல்லிக் கொண்டேன். ஒரு மாதத்தில் 'நிகழும் ருத்ரோத்காரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை உதயாதி நாழிகை 14க்கு மேல் 15 அளவில் காலை 11-36க்குமேல் 12 மணி அளவில் திரு. முத்துச்சாமியின் புதல்வன் நிறைநாட்செல்வன் திருப்பதிசாமிக்கும் திரு. தேவேந்திரன் புதல்வி நிறைநாட்செல்வி தேவதைக்கும்...' என்று திருமண அழைப்பிதழைப் படித்துப் பார்த்துப் பரவசமடைந்தேன்!

ஒரே மாதிரி ஓசையை உடைய சில பெயர்கள் கீதா, ராதா, சீதா சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும்; சில நேரங்களில் தர்மசங்கடமானநிலையை உண்டாக்கும்.

வெளியூரில் இருக்கும் என் நண்பர் ஒருவர்.... (இங்கிதம் கருதி அவரைக் கிருத்துவராக மாற்றியுள்ளேன்) அவர் வீட்டுக்கு மூன்று முறை போயிருக்கிறேன். முதல் முறை நண்பரின் மூன்று வயதுப் பெண் குழந்தையின் பெயரைக் கேட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தேன். இரண்டாவதுமுறை நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்