பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் * 84

நேரம் பார்த்து பணக்காரப் பையனின் தந்தையார் தம் நண்பரிடத்தில் நெடுநாட்களாய்ப் பிள்ளையில்லாமல் பிறந்ததால் ஊரார் பிச்சையாய் வளரட்டும்என்று பிச்சை என்று பெயர் வைத்ததாகச் சொல்கிறார். அதைக் கேட்டதும் உணவு கொண்டு வந்த, பணக்காரச் சிறுவனைப் பார்த்து 'உன் பேரே பிச்சை; இன்னொருத்தனுக்கு நீ பிச்சை போடுகிறாயா.. என் பேரு என்ன தெரியுமா, ராஜா பிச்சைகிட்ட ராஜா போய் பிச்சை வாங்கலாமா என்று அலட்சியமாக அறுசுவை உணவை உதறித் தள்ளிவிட்டு கம்பீர நடை போடுகிறான்.

சேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ஒரு சுவையான காட்சி... சீசரைக் கொன்ற சதிகாரர்களில் ஒருவன் சின்னா என்பவன்... அதே பெயருடைய மற்றொருவனைக் கவிஞனைச் - சின்னா என்ற பெயர் வைத்த ஒரே காரணத்துக்காகக் கொன்று விடுகிறது ரோம் நாட்டுக் கும்பல். கும்பலில் சிக்கிக்கொண்ட சின்னா எவ்வளவோ கெஞ்சுகிறான். நான் சதிகாரன் சின்னா இல்லை கவிஞன் சின்னா என்கிறான். 'அப்படியானால் அவன் எழுதிய மோசமான பாடல்களுக்காக அவனைக் கொல்லுங்கள் என்கிறான் கும்பலில் ஒருவன். 'என்னை விட்டுவிடுங்கள் நான் சதிகாரன் சின்னா இல்லை, என்று மீண்டும் மன்றாடுகிறான்... “அதைப் பற்றிக் கவலை யில்லை. அவன் பெயர் சின்னா அவன் இதயத்திலிருந்து அவன் பெயரைப் பெயர்த்தெறியுங்கள். பின்னர் அவனைப் போகவிடுங்கள்' என்கிறான் இன்னொருவன். கடைசியில் ஒரு வழியாய் போகவேண்டிய இடத்திற்கு அவனைப் போகவிடுகிறார்கள். பாவம் அவன் செய்த ஒரே