பக்கம்:விசிறி வாழை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 விசிறி வாழை

போன தன் துயிலே மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டு அந்தச் சொப்பன நிகழ்ச்சியின் தொடர்ச்சியில், பாரதியின் மலர்ந்த விழிகளை, சிவந்த இதழ்களே, பூக்கும் முறுவலை மீண் டும் மீண்டும் கண்டு ரசிக்க விரும்பினன்.

காதல் வயப்பட்டவர்கள் எல்லோருக்குமே இந்தச் சொப்பன அவஸ்தை உண்டு போலும்! ஆமாம்; அங்கே மாடியில் படுத்திருந்த டாக்டர் குமாரி பார்வதி, சேதுபதி யின் உருவத்தைத் தன் கண்ணெதிரில் கொண்டு நிறுத்த வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தாள்; அவளால் இயல வில்லை. உண்மையில் அவளுக்குச் சேதுபதியின்பால் ஏற்பட் டிருந்தது உடல்பூர்வமான காதல் அல்லவே அவரை அவள் நேசிப்பது, அவர் அன்பை வேண்டுவது, அவர் துணையை நாடுவது, அவருடனேயே பேசிக் கொண்டிருப்பது, அவரைப் பிரிந்திருக்கும் நேரங்களில் அவரைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆயினும், பார்வதியின் இந்த ஆசைகளுக்கெல்லாம் காரணம் காதல் அல்ல; கேவலம் உடலாசையைப் பின்னணியாகக்கொண்ட, உடலாசை தீர்ந்ததும் அழிந்து போகிற அற்பமான காதல் அல்ல. சேதுபதியிடம் இவள் கொண்டுள்ள நேசத்துக்கும் பாசத்துக்கும், அன்புக்கும் அக்கறைக்கும் முன்னல், வயதும் புறத் தோற்றமும் மிக மிக அற்பமானவை. வயதின் கவர்ச்சி யும் அழகின் வசீகரமும் மங்கிப்போன பிறகு, வலிவிழந்து விட்ட பின்னர், காலம் கடந்த காலத்தில் தோன்றியுள்ள காதல் இது. அதனுல்தான் சேதுபதியின் தோற்றத்தை அவளால் உருவகப்படுத்திப் பார்க்க இயலவில்லை.

ராஜாவைப் போலவே பார்வதியின் உறக்கமும் அடிக் கடி தடைப்பட்டுக்கொண்டிருந்தது. தூக்கம் கலந்த போதெல்லாம் அவள் உறங்க முயன்று கொண்டிருந்தாள்.

உறங்கிய போதெல்லாம் சேதுபதியின் தோற்றத்தை உருவகப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்; உறக்கம் வந்தது. ஆயினும் அவளால் சேதுபதியின் உருவத்தைக் காண முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/110&oldid=686959" இலிருந்து மீள்விக்கப்பட்டது