பக்கம்:விசிறி வாழை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினென்று 107

அன்று மாலை அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவள் நெஞ்சத்தில் பதிந்து கிடந்தன. இன்ஷஒரன்ஸ் பற்றிய தன்னுடைய அறியாமையை அறியநேர்ந்த சேதுபதி என்ன எண்ணியிருப்பார் என்பதை நினைத்தபோது அவளுக்கு வெட்கமாயிருந்தது. நஷ்டம் இன்ஷ9ரன்ஸ் கம்பெனிக்குத்தானே?’ என்று அதிமேதாவியைப் போல் தான் கூறியபோது, அவர் அலட்சியமாகச் சிரித்த சிரிப்பில் எத்தனைப் பொருள் பொதிந்து கிடந்தன!

‘நீ மெத்த படித்தவளாயிருக்கலாம்; பட்டங்கள் பெற் ஹிருக்கலாம்; அறிஞர்கள் பலரோடு வாதாடி வெற்றி பெற்றிருக்கலாம்; கல்வி கேள்விகளில் வல்லவளா யிருக்க லாம். ஆனாலும் இந்தச் சின்ன விஷயம் உனக்குத் தெரிய வில்லேயே, என்று அவர் தம் சிரிப்பின்மூலம் கூருமல் கூறி விட்டாரே! இப்போது அதை எண்ணிய பார்வதிக்கு வெட்க மாயிருந்தபோதிலும், கூடவே இன்பமாகவும் இருந்தது!

என்னுடைய பெரு மதிப்புக்கும், நேசத்துக்கும் பாத்திர மாகியுள்ள சேதுபதிதானே சிரித்தார்? அந்தச் சிரிப்பு என்னுடைய அறியாமையைப் பற்றியதுதானே? என் அறியாமையை எள்ளி நகையாடும் அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுத்துக் கொண்டதால் அல்லவா அவர் அவ்வாறு சிரித்தார்? அப்படியானல் அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது; அக்கறை இருக்கிறது; ஆசை இருக் கிறது; பாசமும், பரிவும் இருக்கின்றன. அந்தச் சிரிப்புக்கு இதெல்லாம்தான் பொருள். சேதுபதியின் சிரிப்பு அவள் காதுகளில் ரீங்காரமிட்டது. அந்தச் சிரிப்பின் இனிமை யிலே, பாசத்திலே, பரிவிலே என்றுமே அனுபவித்தறியாத சுகம் இருப்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்ச்சி களே யெல்லாம் ஒன்றாகத் திரட்டிப் புன்முறுவலாக வெளி விட்டுக் கொண்டிருந்தன அவளுடைய இதழ்கள்.

மணி ஒன்பது இருக்கும். ராஜாவுடன் டாக்ளியில் வந்து இறங்கிய பாரதி, நெஞ்சு படபடக்க மெதுவாக அடிமேல் அடி வைத்தவளாய், தன் தந்தைக்குத் தெரியாமல் வீட்டுக் குள் சென்றுவிட எண்ணினுள். நடு ஹாலில் படுத்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/111&oldid=686960" இலிருந்து மீள்விக்கப்பட்டது