பக்கம்:விசிறி வாழை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்ைகு 141

வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய் திருக் கிறேன். அழுத்தமாகவும் திருத்தமாகவும் பேசினன் கோபால்.

கோபாலனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று. அவனை ஒரு முறை கண்ணுல் பார்த்துவிட விரும்பிய பார்வதி, கதவின் வழியாக அவனைப் பார்க்கவும் செய்தாள்.

சிரித்த முகத்துடன், மிடுக்கான தோற்றத்துடன் அடக்கமாக நின்றுகொண்டிருந்த கோபாலனின் உருவத் தைக் கண்ட பார்வதி, ‘மீனுவுக்கு ஏற்ற ஜோடிதான் என்று மனத்திற்குள்ளாகவே மகிழ்ந்து கொண்டாள்.

  • சரி, நீ போகலாம்: என்று கோபாலனை அவனுடைய வகுப்புக்கு அனுப்பிவிட்டுத் தம்முடைய அறைக்குத் திரும்பி வந்தார் வேதாந்தம்,

வேதாந்தத்தைக் கண்டதும் மிக்க நன்றி. தங்க ளுடைய நேரத்தை வீணுக்கி விட்டதற்காக மன்னிக்க வேண்டும்’ என்று எழுந்து நின்றாள் பார்வதி.

“வீனக்கி விட்டதாக எப்படிக் கூற முடியும்? பயனுள்ள ஒரு முக்கிய காரியமல்லவா இது???

பார்வதி பதில் கூருது புன் முறுவலுடன் நின்று கொண் டிருந்தாள்.

‘ஆமாம்; தாங்கள் தமிழில் இவ்வளவு அழகாகப் பேசுகிறீர்களே, எப்போதுமே இப்படித்தான் பேசுவீர் களா?’ வேதாந்தம் விசாரித்தார். -

‘இல்லை; தமிழில் பேசிளுல் தாங்கள் மகிழ்ச்சியுறுவின்

கள் என்பதால் பேசிப் பார்த்தேன். நான் நன்றாகப் பேசு கிறேன் என்பதைக் கேட்க எனக்குப் பெருமையாக இருக் கிறது.’ என்றாள் பார்வதி, -

மீேவிைன் தந்தைக்குக் கடிதம் எழுதி, திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்துவிடுங்கள். கல்லூரித் தலைவர்கள், மாணவர்களின் கல்வி விஷயத்தில் மட்டும் கருத்தைச் செலுத்தில்ை போதாது. அவர்களுடைய எதிர்கால் வாழ்க் கையிலும் கவனம் செலுத்த வேண்டும்.: சிரித்தபடியே கூறினர் வேதாந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/145&oldid=686997" இலிருந்து மீள்விக்கப்பட்டது