பக்கம்:விசிறி வாழை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 விசிறி வாழை

வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. அதை அடுத்து ஒரு சீட்டிக் குரல், தொடர்ந்து வருவது ராஜாதான் என்பதை அறிந்து கொண்ட பாரதியின் உள்ளத்தில் குதுரகலம் பொங் கியது.

ரோஜா! உனக்கு ஆயுசு நூறுடா’ என்றாள் பார்வதி. “என்ன அத்தை! நான் வாலிபனுக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா? என்னே குடு குடு கிழவனுக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறதா?”

பார்வதி சிரித்துக் கொண்டே ‘ஆமாம்; நீ கிழவனுக ஆனல் வேடிக்கையாகத்தான் இருக்கும். சரி; பாரதிக்குத் த லே வலிக்கிறதாம், அவளைக் கொண்டுபோய் வீட்டில் விட்டு வா...??

சேரி, அத்தை!’’ என்று சந்தோஷமாகத்தான் பதில் கூற வாயெடுத்தான் ராஜா. ஆனல் தனக்கு அந்த வேலை யைச் செய்வதில் இஷ்டமில்லாதது போல் அத்தையிடம் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ‘இதுவே எனக் குப் பெரிய வேலையாகப் போய்விட்டது. பாரதி வீட்டு டிரைவராகவே ஆகிவிட்டேன்’ என்று முணுமுணுத்த படியே பாரதியைக் கடைக் கண்ணுல் கவனித்தான்.

வானத்தில் வீட்டுக் கூரைக்கு மேலே அப்போதுதான் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தில் ராஜா கூறிய வார்த்தைகள் பார்வதியின் காதில் விழவில்லே. ‘என்னடா சொல்கிறாய்?’ என்று கேட்டாள் அத்தை. ரேடியோவில் இன்று எனக்குக் குவிஸ் புரோகிராம்? இருக்கிறது. அத்தை ஆகையால் நான் திரும்புவதற்கு லேட்டாகும்.’’ என்றான் ராஜா.

“சரி சரி; சீக்கிரம் வந்துவிடு’ என்று சொல்லி அனுப் பினுள் பார்வதி. -

பார்வதிக்கு இருப்புக் கொள்ளவில்க்ல. அமைதியின்றித் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். சேதுபதியின் நினைவு முகத்தை அவளால் மறக்க முடியவில்லை. -

குருவி ஒன்று இங்குமங்கும் அகலந்து கொண்டிருந்தது. தன் கூட்டுக்குள் போய் உட்காருவதும், பிறகு துணைவனைக் காணுமல் தேடி அலைவதுமாக இருந்த அந்தக் குருவியையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/150&oldid=687004" இலிருந்து மீள்விக்கப்பட்டது