பக்கம்:விசிறி வாழை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 - விசிறி வாழை

திருவாளர் சேதுபதியும், பாலம்மாளும் அப்போது அறைக்குள் பிரவேசிக்கவே, சுற்றியிருந்தவர்கள் சற்று விலகி மரியாதையுடன் நின்றார்கள்

சேதுபதியைக் கண்டதும் பார்வதியின் இதயம் படபடத்தது. ஐயோ இவர் எதற்காக இங்கே வந்தார்? இவரை நான் மறக்க முயன்றலும் இவர் என்ன மறக்கவிட மாட்டாரோ? இவரை இனிக் கண்ணுல் காணக்கூடாது; மனத்தாலும் நினைக்கக்கூடாது என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது இவரே என் எதிரில் வந்து நிற்கிருரே!’

டாக்டர் பாலம்மாள், பார்வதியின் கை நாடிகளைச் சற்று நேரம் உணர்ந்து பார்த்துவிட்டுப் பின்னர் காது குழலே வைத்துப் பரிசோதித்தாள்.

கேவலப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு மாதம் ஓய் வெடுக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். நான் நேற்றுச் சொல்லிவிட்டுப் போனேன். கல்லூரிக்குப் போகக் கூடாது என்று’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர். டாக்டருடனேயே கீழே இறங்கிச் சென்ற ராஜா ‘அத்தைக்கு என்ன ஆகாரம் கொடுக்கலாம் டாக்டர்?’’ என்று விசாரித்தான். -

  • மில்க்கும், ப்ரூட் ஜூலம் நிறையச் சாப்பிடனும். என்றாள் டாக்டர்.

என்ன ப்ரூட்ஸ் கொடுக்கலாம் டாக்டர்? மாதுளம் பழம் கொடுக்கலாமா? அத்தைக்கு மாதுளம்பழம் ரொம்பப் பிடிக்கும் ...” -

பிேடிச்சால் ஜூளாகவே பிழிந்து கொடேன்...ரெஸ்ட் ரொம்ப முக்கியம்’ என்று கூறிக்கொண்டே காரில் போய் ஏறிக்கொண்டாள் டாக்டர்.

அறைக்கு வெளியே வராந்தாவிலேயே நின்று கொண் டிருந்த சேதுதிபதி, ராஜா வந்ததும், டாக்டர் என்ன சொல்கிறார் ராஜா!’ என்று விசாரித்தார்.

‘அத்தைக்கு ரெஸ்ட்தான் .ெ ராம் ப முக்கியம் என்கிறார்,’ - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/168&oldid=687026" இலிருந்து மீள்விக்கப்பட்டது