பக்கம்:விசிறி வாழை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினேழு 167

இவர் எதற்காக என்மீது அன்பு பாராட்ட வேண்டும்? அளவுக்கு மீறிய அன்பைப் பொழிந்து என்னைச் சித்திர வதைக்குள்ளாக்க வேண்டும்? நான் மயக்கமுற்று விழுந் ததற்கு இவரல்லவா காரணம்? இவரிடம் நான் கொண் டிருந்த அன்பல்லவா காரணம்! இதுகாறும் இவரையே நினைத்து நினைத்து, இவருடைய அன்புக்காகவே ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன். என்னுடைய எண்ணத்தை இப்போது மாற்றிக்கொண்டு விட்டேன். இவரை மறந்து வாழ முடிவு செய்துவிட்டேன். இப்போது நான் வேண்டுவ தெல்லாம் இவர் என்னிடம் அன்பு பாராட்டாமல் இருக்க வேண்டும் என்பதுதான். தேவி! இந்தச் சோதனையிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண் i. ss 6ss.

வாசலில் சேதுபதியின் கார் புறப்படும் ஓசை கேட்ட போது பார்வதி அந்த ஒசையை உற்றுக்கவனித்தாள். தன் கண்களில் பெருகி வழிந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்ட பார்வதி, என்னல் அவரை மறக்க முடிய வில்லை...’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

மறுநாள் காலே. மணி எட்டுகூட அடித்திருக்காது. பாரதியையும், தங்கை காமாட்சியையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் சேதுபதி. காரிலிருந்து இறங்கியவர் நேராக மாடிக்குச் சென்று பார்வதி படுத்திருந்த அறைக் குள் எட்டிப் பார்த்தார். பார்வதி அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்தாள். மெதுவாக அந்த அறைக்குள் சென்ற சேதுபதி, தன் கையோடு கொண்டு வந்திருந்த பழங்களை எடுத்துப் பக்கத்திலிருந்த மேஜைமீது வைத்தார். அவ்வளவும் மாதுளம் கனிகள்:

‘அத்தைக்கு மாதுளம் பழம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்’ என்று முதல் நாள் இரவு ராஜா டாக்டரிடம் கூறியதும், பழத்தை ஜூஸாகப் பிழிந்து கொடேன்’ என்று டாக்டர் பதில் கூறியதும் சேதுபதியின் காதில் விழுந்திருக்க வேண்டும். அவர் சந்தடியின் றிப் பழங்களே வைத்துவிட்டுப் புறப்பட்டபோது பார்வதி சட்டென்று கண் விழித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/171&oldid=687031" இலிருந்து மீள்விக்கப்பட்டது