பக்கம்:விசிறி வாழை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 விசிறி வாழை

தேக்காளிச் சட்னி ரொம்பக் காரமாயிருக்குமே! நீங்கள் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாது’ என்றார் சேதுபதி.

‘எனக்கு ஜூரம் ஒன்றுமில்லே. எது பிடிக்கிறதோ அது சாப்பிடலாம் என டாக்டரே கூறியிருக்கிறார்...?? என்றாள் பார்வதி.

“இளம் வயதில் கல்லேயும் ஜீரணம் செய்து கொள்ள லாம். ஐம்பதைத் தாண்டிவிட்டால் ஆகாரம் சாதுவா யிருக்கவேண்டும். ஆவியில் வெந்த இட்லி எளிதில் ஜீரண மாகி விடக்கூடியது. வாய்க்கு ருசியாகவும் இருக்கிறது. ஆமாம்; எனக்கு இட்லி பிடிக்கும் என்று உங்களுக்கு யார் சொன்னது?’ என்று கேட்டார் சேதுபதி.

“யாரும் சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கும் என்பதற் காகவே செய்யச் சொன்னேன். இது உங்களுக்கும் பிடித்த பண்டமாக அமைந்துவிட்டதுபற்றி மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றாள் பார்வதி.

“இந்த இட்லியும், தக்காளிச் சட்னியும் ரொம்பப் பொருத்தமாக அமைந்து விட்டன. நல்ல கரிம்பினேஷன்’ என்றார் சேதுபதி,

‘மண வாழ்க்கையும் இப்படி அமைந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்றாள் பார்வதி.

சேதுபதி அவளே ஏறிட்டுப் பார்த்தார்; அந்தப் பார்வை யில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்ற கேள்வி தொக்கி நின்றது.

‘தங்களிடம் இன்று ஒரு முக்கியமான விஷயம்பற்றிப் பேசப் போகிறேன். நான் கூறப்போவதைத் தாங்கள் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்ற பீடிகையுடன் பேச்சைத் தொடங்கினுள் பார்வதி.

“என்ன விஷயம் அது?’ என்று நிதானமாகக் கேட்டார் சேதுபதி.

‘திருமண விஷயம்தான்’ என்று கூறிவிட்டுப் பார்வதி, சேதுபதியின் முகத்தையே கண்கொட்டர்மல் கவனித்தாள். அவர் முகத்தில் எவ்வித வியப்புக் குறியும் தோன்றவில்லே. சலனமற்ற அவர் முகம் எப்போதும் போல் அமைதியாகவே இருந்தது.

வி.வா.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/202&oldid=689485" இலிருந்து மீள்விக்கப்பட்டது