பக்கம்:விசிறி வாழை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 விசிறி வாழை

என்தாங்கள் இனி எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. நாளைக் காலேயில் நான் மீண்டும் வந்து பார்க்கிறேன்... காமாட்சி! நீ பார்த்துக் கொள்கிருயா? தூங்கிவிடப் போகிறாய்...பாவம் உனக்குத்தான் சிரமம்’ என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி.

திரும்பிச் செல்லும்போது அவர் உள்மனம் அவரைக் கேட்டது. . z

சேதுபதி அவள் மீண்டும் மயக்கமுற்றுக் கீழே விழு வானேன்? உன்னுடன் ராஜா-பாரதி திருமணம்பற்றிப் பேசியபோது மகிழ்ச்சியோடு தானே காணப்பட்டாள்? அதிர்ச்சிக்கோ, கவலேக்கோ அதில் என்ன இருக்கிறது? உனக்கும் அவளுக்கும் ஏற்பட இருந்த உறவு முறை மாறி விட்டது என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணமோ? அப்படி யாளுல், அமைதி நிம்மதி’ என்பதெல்லாம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் பேச்சுத்தான?

ஒரு வாரம் கடந்தது. பார்வதியின் உடல்நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. எழுந்து நடக்கவும் சக்தியற்ற வளாய்ப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள் அவள்.

டாக்டர்கள் மட்டும் வேளை தவருமல் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆல்ை அவள் உடல் நிலையில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இந்த நிலையில் திரு மணத்தை நடத்துவதற்கு வேண்டியஉற்சாகமோ ஊக்கமோ சேதுபதிக்கு எங்கிருந்து வரும்? ‘திருமணத்தைத் தள்ளிப் போடுவதால் நிலைமை மாறலாம். இதற்குள் பார்வதியின் மனமும் மாறலாம்’ என்ற சபலம் அவர் உள்ளத்தில் ஒரு பக்கம் ஒளிந்து கொண்டிருந்தது. ‘. .

ஆலுைம் பார்வதிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்று வதில் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. திருமண ஏற். பாடுகள் ஜாம் ஜாம் என்று நடந்துகொண்டிருந்தன.

கோமாட்சி! அடுத்த வெள்ளிக் கிழமை முகூர்த்தம் நிச்சயம் செய்திருக்கிறேன். இன்னும் ஏழே நாட்கள்தான். கலியாணத்தை இந்த வீட்டிலேயே நடத்திவிடவேண்டியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/212&oldid=689496" இலிருந்து மீள்விக்கப்பட்டது