பக்கம்:விசிறி வாழை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 விசிறி வாழை

ஏற்படுவதில்லை...’ என்று சூட்சுமமாகவே பதில் கொடுத்

தார் சேதுபதி.

“அண்ணு ஜவுளிகளை இங்கேயே கொண்டுவர சொல்லு, பார்வதியே பார்த்து முடிவு செய்யட்டும்...’ என்றாள் காமாட்சி.

6 ஏழெட்டு ஜவுளிக் கடைகளை இங்கு அனுப்பி வைக்கி றேன், போதுமா?’ என்று சிரித்துக் கொண்டே புறப்பட் டார் சேதுபதி. .

கலியான ஏற்பாடுகள் துரித காலத்தில் நடந்துகொண் டிருந்தன. ராஜாவும் பாரதியும் தாங்கள் மணமக்கள் என்பதைக்கூட மறந்து ஓடி ஆடி வேலே செய்து கொண் டிருந்தார்கள்!

‘இன்னும் மூன்றே தினங்கள்தான்! இன்னும் இரண்டே நாட்கள்தான்’ என்று ஒவ்வொரு நாளும் கவலையோடு சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி. -

பார்வதி கட்டிலில் படுத்த வண்ணமே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

ராஜாவும் பாரதியும் கூட்டாகவே ஒடியாடி வேல் செய்து கொண்டிருப்பதைக் கண்ட அவள், பாரதி! நான் மறுதினம் ராஜா உனக்குக் கணவகைப் போகிறன். ஆகை யால் நீ அவனிடம் கொஞ்சம் வெட்கப்படுவதுபோல் நடிக்க வேண்டும்’ என்று கேலி செய்தாள்.

‘போங்க அத்தை எனக்கு வெட்கமாயிருக்கிறது!?? என்றான் ராஜா.

“இதோ பார்த்தீர்களா, வேஷ்டி சட்டை’ என்று கூறிக் கொண்டே கையில் ஜவுளிகளுடன் வந்து சேர்ந்தார் சேதுபதி. -

  • வேட்டி சட்டையா? யாருக்கு? ராஜாவுக்கா?... ரொம்ப சீப்பாக வாங்கி விட்டீர்களே! சிக்கனத்தை மாப்பிள்ளை டிரஸ்ஸிலேயே ஆரம்பித்து விட்டீர்களோ? என்று கேட்டாள் பார்வதி. .
  • இது மாப்பிள்கள் டிரஸ் இல்லை; வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிருனே, செவிட்டுப் பெருமாள், அவனுக்கு!” என்றார் சேதுபதி,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/214&oldid=689498" இலிருந்து மீள்விக்கப்பட்டது