பக்கம்:விசிறி வாழை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்து மூன்று

வாசலில் காட்டியிருந்த வாழை மரங்களும். மாவிலைத் தோரணங்களும் வாடி வதங்கிச் சருகாகிக் கொண்டிருந்தன. திருமணம் நடந்த வீட்டில் காணக் கூடிய குதூகலம், ஆர வாரம், விருந்து வைபவம், விருந்தாளிகள் நடமாட்டம் எதுவுமே அங்கு இல்லே.

பார்வதியின் நில வரவர மோசமாகிக் கொண்டே போயிற்று. இப்போதெல்லாம் அவள் மாடியை விட்டுக் கீழே இறங்கிச் செல்லவும் சக்தியற்றவளாகிப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள். ராஜாவும் பாரதியும் எந் நேரமும் அவள் அருகிலேயே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருந்தனர். சேதுபதி பெரிய பெரிய டாக்டர்களே அழைத்து வந்து, பார்வதிக்குச் சிகிச்சை அளிக்கச் செய்து, அவளைப் பழைய நிலைக்கு மீட்டு விடுவதில் முனைந்திருந்தார். ‘பார்வதி குணமடைந்து பழையபடி சந்தோஷமாக வாழவேண்டும்.'-இதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அவளுடைய உயிருக்காக, வாழ்வுக்காக அவர் எதையுமே தியாகம் செய்யத் தயாராயிருந்தார்.

கண்களே மூடியபடியே சேதுபதியைப்பற்றி எண்ண மிட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கு வியப்புத்தான் மேலிட் டது. ‘என் மீது அவர் ஏன் இத்தனை அக்கறை காட்டவேண் டும்? அன்று அவர் எனக்காக ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களே நான் ஏறிட்டுப் பாராமல் அலட்சியம் செய்ததைக்கூட அவர் பொருட்படுத்தவில்லே! எவ்வளவு பெருந்தன்மையான குணம்? நான் பண்பற்றவள். அவரோடு ஒப்பிடும்போது மிக மிக அற்பமானவள். அவருடைய பெருந்தன்மையோடு உயர் குணத்தோடு நற்பண்போடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்க்கவே தகுதியற்றவள்... எனக்காக அவர் எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக் கிறார் என் மகிழ்ச்சிக்காக, மன அமைதிக்காகத் தம் முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் சித்தமாயிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/217&oldid=689501" இலிருந்து மீள்விக்கப்பட்டது