பக்கம்:விசிறி வாழை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து மூன்று 31

வின் உள்ளத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கி யிருந்தது.

உள்ளத்தில் புகுந்துவிட்ட அந்தப் புதுமையான உணர்வை,நெஞ்சத்தை அலக்கும் சஞ்சலத்தை ஆரம்பத்தி லேயே அழித்துவிட முயன்றாள். ஆல்ை முடியவில்லை, சோடா புட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணுடிக் கோலியைப்போல் அந்த உணர்வு-அவளே யறியாமல் அவள் இதயத்தில் புகுந்து அலேத்துக் கொண் டிருந்தது. அதை அவ.அ விழுங்கி ஜீரணம் செய்து கொள் ளவோ, வெளியே துப்பி விடவோ முடியாமல் தவித்தாள்.

கண்ணுடியின் முன் சென்று அதில் பிரதிபலித்த தன் உருவத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தாள். தன் பிம்பத்தை அதில் கண்டபோது பார்வதியின் வேதனை அதிகரித்தது, உண்மையாகவே தனக்கு வயதாகி விட்டதா? அதோ இடது காதின் ஒரமாக இரண்டொரு நரைகூடத் தெரிகின்றனவே! மெதுவாகத் தன் இடது காதுப் பக்கமாகத் தடவிப் பார்த்துக்கொண்டாள். ‘ஓ! கண்ணுடியில் இடது புறம் என்றால், தனக்கு அது வலதுபுறம் அல்லவா?-மெத்தப் படித்த பார்வதிக்கு, டாக்டர் குமாரி uritsujg B.A., B.Ed, PhD (Lonodon)Dip in Anthropology போன்ற நீண்ட பட்டங்களைப் பெற்றிருந்த அறிவாளி பார்வதிக்கு அப்போதிருந்த மனநிலையில் இந்தச் சின்ன விஷயம்கூடத் தெரியாமற் போயிற்று! தனக்குத் தானே அனுதாபத்துடன் ஒரு முறை சிரித்துக்கொண்டவளாய், மேஜை மீதிருந்த காலப் பத்திரிகையை எடுத்துப் புரட்டி ள்ை. அதிலிருந்த எழுத்துகள் நீரிலே கரைந்தவை போல் தெளிவின்றித் தெரிந்தன. .. .

‘ஓ’ கண்ணுடி அணிந்து கொள்ளாமல் அல்லவா படிக் கிறேன்?’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கண்ணு டியை எடுத்துப் போட்டுப் பார்த்தபோது எழுத்துகள் மணி மணியாய்ப் பளிச்சிட்டன. “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/35&oldid=689532" இலிருந்து மீள்விக்கப்பட்டது