பக்கம்:விசிறி வாழை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஐந்து

ஓங்கி உயர்ந்து கொண்டிருந்த உதய சூரியனின் அழ கைப் பலகணியின் வழியாகப் பார்த்து ரசித்தபடியே சிந்தனையில் மூழ்கியிருந்தாள் பார்வதி.

நேற்று முன்தினம் சேதுபதியை அவருடைய இல்லத் தில் கண்டு பேசிவிட்டு வந்தது முதலே, அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறுபட்டிருந்தது. இதற்குமுன் அனுபவித்தறியாத அபூர்வ உணர்வும், ஆனந்தப் பரவசமும் அவன் ஆட்கொண்டிருந்தன.

தினம் தினம்தான் அவள் சூரியோதயத்தின் அழகைக் காண்கிருள்; அந்திவேன்ச் சூரியனின் அமைதியைப் பார்க் கிருள். ஆயினும் என்றும் காணுத புதுமையும் கவர்ச்சியும் இன்று மட்டும் தோன்றுவானேன்? எங்கோ, எப்போதோ படித்திருந்த சில வரிகள் அவன் கவனத்துக்கு வந்தன.

கோலையில் சூரியன் உதிக்கும் அழகைக் கண்டு களிக் கிருேம். மாலையில் அஸ்தமனத்தின் அற்புதத்தைக் கண்டு ஆனந்தமடைகிகுேம். அதே சமயத்தில் நம்முடைய வாழ் தாளில் ஓர் ஏடு கிழிந்து விட்டது என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிருேம்.’’ -

இந்தக் கருத்து, பார்வதியின் வயதைச் சுட்டிக் காட்டிச் சிந்திக்க வைத்தது. .

‘நாற்பத்தாறு ஆண்டுகள் விளுகப் போய்விட்டனவா? இனி எனக்கு வாழ்வே கிடையாதா? இனமைப் பருவத்தின் எல்க்லயைக் கடந்து விட்டேகு வயோதிகத்தின் முதல் படி யில் காலடி எடுத்து வைத்து விட்டேகு?

தன் உருவத்தை ஒருமுறை பார்த்துக் கொள்ள விரும் பியவளாய் நிலைக்கண்குடியின்முன்சென்குள். அங்கே தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/53&oldid=689552" இலிருந்து மீள்விக்கப்பட்டது