பக்கம்:விசிறி வாழை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விசிறி வாழை

பார்வதிக்குத் தன்னுடைய கடந்தகால வாழ்க்கை நினைவுக்கு வரவே, கண்களை மூடியபடியே, தான் கல்லூரி யில் படித்த நாட்களை எண்ணிப் பார்த்தாள். அப்போது டியூஷனுக்குச் சென்ற நிலைமைக்கும், இப்போதைய நிலை மைக்கும் எத்தனை வித்தியாசம்! -

அப்போது அவள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி, முன்னேற முடியாத நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தது. இன்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பார்வதி, தன் சக மாணவிகள் சிலருக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு ச்ெய்துகொண்டு, அதில் வந்த வரு மானத்தின்மூலம் தன் ஒரே அண்ணனையும், நோய்வாய்ப் பட்டிருந்த தன் தாயாரையும் காப்பாற்ற வேண்டிய தாயிற்று.

டியூஷன் சொல்லித் தரும் பணியை ஒரு கட்டாயக் கடமையாக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் அப்போது அவள் இருந்தாள்.

இன்று முற்றிலும் மாறுபட்ட நிலை. வறுமையின் வற்புறுத்தலேர், கடமையின் கட்டாயமோ இப்போது இல்லே. -

எந்தக் கல்லூரிபில் படித்துப் பட்டம் பெற்றாளோ, அதே கல்லூரிக்கு இன்று அவள் தலைவி. பல பட்டங்களைப் பெற்றவள். அந்தக் கல்லூரிக்காகவே தன் வாழ்நாளே அர்ப் பணித்துக்கொண்டு, தன்னையும் தன் எதிர்காலத்தையும் மறந்து வாழ்பவள். தன் உழைப்பின் பயனுக, தான் எடுத் துக்கொண்ட பெருமுயற்சி காரணமாகக் கல்லூரி அடைந் துள்ள உன்னத நிலையைக் கண்டு பெருமிதப்படுபவள். ‘கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டும் வெற்றிகரமாகப் பூர்த்தி யாகி விட்டது. இனி ஒரு குறையுமில்லை என்ற திருப்தி யுடன், மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் இருக்கும்போதுதான அவள் அந்தரங்கத்தில் ஒரு சிறு கீறல் தோன்றவேண்டும்? அந்தக் கீறல் சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாக வேண்டும்? அது தானகவே அழிந்து போகிற கீறல் அல்ல; அவளாக அழித்துவிடக் கூடியதும் அல்ல; அவள் இதயத்தின் பூவிதழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/58&oldid=689557" இலிருந்து மீள்விக்கப்பட்டது