பக்கம்:விசிறி வாழை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்பது 89

வயது ஐம்பத்திரண்டு கடந்து விட்ட பிறகு, இன் ைெருத்தியின் துணையை, உறவை நாடுகிறது அவ ருடைய உள்ளம். இதைக் காதல் என்று கூறமுடியாது; காதலுக்கும் உடலுறவுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆசை இது.

பார்வதிக்கு வயது நாற்பத்தாறு ஆகிவிட்டது. இத்தனைக்

காலமும் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட அவள், திருமண வாழ்க்கையை என்றுமே விரும்பியதில்லை. தன் கன்னிப் பருவத்தை, இளமையின் பைசாச உணர்ச்சிகளுக்குப் பலி யாக்கி விடாமல் புனிதமாகப் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்துவிட்ட பின்னர், இத்தனைப் பிராயம் கடந்து இப்படி ஒரு விசித்திரமான ஆசை !

சேதுபதியின் உறவை அவள் விரும்புகிருள். ஆயினும் அந்த எண்ணம் தற்கால இலக்கியங்களில் சர்வ சாதாரண மாக வர்ணிக்கப்படும் காதல் அல்ல. அவரிடம் அவளுக்கு ஏற்பட்டுள்ள அன்புக்கு, ஆசைக்கு, பரிவுக்குக் காரணம் அறிவு பூர்வமான தொடர்பேயாகும்.

சேதுபதியின் அறைச் சுவரைப் பெரிய உலகப்படம் ஒன்று அலங்கரித்தது. உலகத்திலுள்ள தேசங்கள், தீவுகள், கடல்கள், மக்லகளெல்லாம் அதில் வரையப்பட்டிருந்தன. இன்னொரு புறம் உலக மகா மேதைகள் எழுதிய அறிவு நூல் கள் கண்ணுடி அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் வெண்கலத்திலான புத்தர் சில, மேஜை மீது உருண்டை வடிவமான சுழலும் உலகத்தின் கோளம் ஒன்று.

சுற்றியுள்ள படங்களும், அறிவு நூல்களும் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல; சேதுபதியின் அறிவு விசாலத் துக்குச் சாட்சியம் கூறிக்கொண்டிருக்கும் உன்னதப் பொக் கிஷங்கள் அவை.

‘கான் ஓர் அறிவாளி, கல்வி கேள்விகளில் வல்லமை வாய்ந்த ஓர் இலக்கிய மேதை: என்ற பெருமை பார்வதிக்கு உண்டு. ஆயினும் அந்தப் பெருமையை அவள் அகம்பாவ மாக்கி விடவில்லை. அடக்கமும் பண்புமே கற்றதன் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/93&oldid=689596" இலிருந்து மீள்விக்கப்பட்டது