பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

விஜயலஷ்மி பண்டிட்


 தில் வேதனையும் குடி புகுந்திருந்தது. பன்னிரண்டு வருஷ காலம் நேரு குடும்பத்தில், உறவினரில் ஒருவர் போல, வாழ்ந்து வந்தவள் மிஸ் ஹூப்பர். அனைவரும் அவளிடம் பரிவும் பாசமும் கொண்டிருந்தனர். சொரூபாவும் கிருஷ்ணாவும் அவளிடம் அன்பும் மதிப்பும் அளவிலாப் பற்றுதலும் காட்டி வாழ்ந்தனர். இணையிலாத அந்த ஆசிரியை தங்களை விட்டுப் பிரிந்து போகிறாளே என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இதய வேதனை கொடுத்தது.

ஆசிரியை பிரிந்து சென்ற பின்னர் பல தினங்கள் வரையில் நீடித்திருந்தது அவ் வருத்தம். காலப்போக்கிலே அதுவும் மறந்தது.

ஆசிரியை போன பிறகு, கிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் சேர்ந்து கல்வி பயில ஆசைப்பட்டாள்.மோதிலால் நேரு தமது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப விரும்பியதே இல்லை.வீட்டில் தனி ஆசிரியை நியமித்துக் கல்வி புகட்டுவது தான் தனது அந்தஸ்துக்கு ஏற்ற கௌரவம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது, பியானோ வாசிக்கும் பயிற்சி, அல்லது வேறு இசைக்கருவி எதையாவது மீட்டும் திறமை, சமூகத்தில் சம அந்தஸ்து உள்ளவர்களுடன் பழகி நன்றாக சம்பாஷிக்கும் சாமர்த்தியம்-இவையே பெரிய இடத்துப் பெண்களுக்கு இன்றியமையாத பண்புகள் என்ற அபிப்பிராயம் நிலவிய காலம் அது. அவ் யுகதர்மங்களைத் தான் நேருவும் கையாள அவாவினார்.

விஜயலஷ்மி வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெற்று வளர்ந்தாள். அவள் எந்தப் பள்ளிக்கூடத்திலும்