பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

விஜயலக்ஷ்மி பண்டிட்


 வாலிப அதிதியின் பாடலைக் கேட்டுப் பரவசமுற்று அங்கேயே நின்றாள் அவள். பாட்டு முடிந்த பிறகு கூட அவளால் நகர இயலவில்லை. அதனால், அறைக் கதவு திறக்கப்பட்டதை அவள் உணரவே இல்லை.

'ஹல்லோ! நீ தான் குட்டி தங்கச்சி என்று நினைக்கிறேன்' என்ற குரல் அவளை உலுக்கியது.

கிருஷ்ணா திரும்பிப் பார்த்தாள்.சிரிப்பு மிதக்கும் ஒளிக்கண்களை கண்டாள். சட்டென நாணம் அவளைக் கவ்விக் கொண்டது. இருப்பினும் சமாளித்துக் கொண்டாள். 'ஆமாம். நான் தான் சின்னவள். நீங்கள் யார்?' என்று கேட்டாள் கிருஷ்ணா

'நான் தான் ரஞ்சித். நாம் இரண்டு பேரும் நண்பர்கள். சரிதானே?'என்று அன்பாகப் பேசி, கிருஷ்ணாவின் கையைப் பற்றிக் கொண்டு, அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார் அவர்.

"நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?" என்று கிருஷ்ணா வினவினாள்.

"உன் அக்காளைச் சந்திப்பதற்காகத் தான். வேறு எதற்காக?" என்றார் ரஞ்சித்.

'ஏன் சந்திக்க வேண்டும்?' என்றாள் தங்கச்சி.

'ஏனம்மா, உன் அக்காளை மற்றவர்கள். சந்தித்துப் பேசுவது உனக்குப் பிடிக்காதோ?' என்று கேள்வி கேட்டார் அவர்.