பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

விஜயலக்ஷ்மி பண்டிட்




அத்தியாயம் 8.

’உப்பு’ என்கிற சொல் ’மந்திரம் போல்’ மாறியது 1980-ம் ஆண்டிலே,

’உப்புச் சொத்து, உங்க வீட்டு அப்பன் சொத்தா?’ என்று பொங்கி எழுந்தனர் இந்தியர். அவர்களுக்கு வழி வகுத்துக் காட்டினார் மகாத்மா காந்தி.

நாட்டு நிலைமை, மக்களின் மனப்பண்பு, கால நிலை இவைகளைச் சீர்தூக்கி, சரியாக எடைபோடக் கற்றிருந்த காந்திஜீ ஜனசக்தியைப் பயன்படுத்தி ஆட்சியினரை எதிர்க்க அதுதான் தக்க தருணம் என்று கணித்திருந்தார். அதற்கு சர்க்கார் புகுத்த விரும்பிய ’உப்பு வரி’ பயன்பட்டது.

’சட்டத்தை எதிர்ப்போம். வரி கொடோம். உப்புக் காய்ச்சுவோம்’ என்றார் காந்திஜீ. சாத்வீகமான மறியலுக்கான பயிற்சி நாட்டு மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.ஆண்கள் மட்டுமல்ல வீட்டினுள் பொழுது போக்கி வாழ்ந்து பழகிய பெண்களும் ஆயிரக் கணக்கில் படையில் சேர்ந்தார்கள்.

கமலா நேருவும், கிருஷ்ணாவும் ராணுவ வீரர்கள் மாதிரி உடுப்பு அணிந்து தொண்டர் படைப் பயிற்சி பெற்றார்கள்.

1930 மார்ச் 12-ம் நாள் காந்திஜி உலகப் பிரசித்தி பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார். அவ-