பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

77


ஆனால் பணமுடை பெருந்தடையாக நின்றது. அத்துடன் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தலைகாட்டியது.

அத்தியாயம் 12

உலகத்திலே கொடுமை மேகங்கள் குழ்ந்து உறுமத் தொடங்கின. முஸோலினி, ஹிட்லர் ஆகிய பாசிச-நாஜிச வெறியர்கள் யுத்த விதையைத் துவிக் கொண்டிருக்தார்கள்.

நேருவின் குடும்பத்திலும் சோகமேகம் கவிந்தது. 1938-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் ராணி நேரு திடீர் மரணம் அடைந்தாள். அவள் இறந்த இருபத்து நான்கு மணிநேரத்திற்குள்ளாகவே-தங்கையிடம் உயிரை வைத்திருந்த-'பீபி அம்மா'வின் ஆவியும் பிரிந்தது. அன்னையை இழந்ததால் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத ஒரு பகுதியைப் பறிகொடுத்தோம் என்று நேருவும் சகோதரிகளும் வருந்தினர்கள்.

நாடு பிடிக்கும் வெறி ஆசை பற்றிய சர்வசதிகாரிகளின் தயவினால், 1939-ம் வருஷம் பிற்பகுதியில் இரண்டாவது உலக மகாயுத்தம் முளைத்து, ஓங்கி வளர்ந்தது. எதேச்சாதிகார குணம் படைத்த பிரிட்டிஷார் இந்தியாவையும் யுத்தத்தில் இழுத்துவிட்டனர்.

நாட்டினரின் சம்மதம் பெறாமல்–சட்டசபைகளையோ, மந்திரிகளையோ கலந்து ஆலோசிக்காது–'தான் நினைத்த மூப்பாக', தனக்குச் சாதகமாக பிரிட்டிஷ் சர்க்கார் செயல் புரிந்ததை இந்தியர் கண்டித்தனர்.