பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

விஜயலக்ஷ்மி பண்டிட்


சுதந்திரத்தை லட்சியமாகக் கொண்ட காங்கிரஸ் அங்நிய எதேச்சாதிகாரத்தை எதிர்த்து மறுபடியும் போராட வேண்டியதுதான் என்று திட்டமிட்டது.அதனால், காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமாச் செய்தன.

பதவியைத் துறந்து வெளியேறிய தலைவர்கள் காந்திஜியின் ஆக்கினைக்காகக் காத்திருந்தனர். எதிரிக்குக் கூட பெருந்தீங்கு விளேவிக்கக் கூடாது எனும் நல்லெண்ணம் உடைய மகாத்மா திவிரமான போராட்டத்துக்கு இசையவில்லை. எதிர்ப்பைக் காட்டுவதற்காக 'தனிநபர் சத்தியாகிரகம்' மட்டும் போதுமானது என்று அறிவித்தார் அவர் .

பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்குமிடையே மூண்ட யுத்தம் நாசப் பாதையிலே பயங்கரமாக முன்னேறிக் கொண்டிருந்தது.காலத்துக்கேற்ப, பிரிட்டிஷார் மன மாற்றம் கொள்வர். இந்தியாவுக்கு விடுதலை தருவர் என்று எதிர்பார்த்த நாட்டுமக்கள் ஏமாற்றமே கண்டனர்.செயல் திறம் இழந்து குமைந்தார்கள்.

வேறு வழி இல்லை எனக் கண்டவுடன் காந்திஜி 1940-ல் 'தனி நபர் சத்தியாக்கிரக'த்தை ஆரம்பித்து வைத்தார். நாட்டின் ஆத்மீக எதிர்ப்பைக் காட்டும் ஏகப் பிரதிநிதியாக, காந்திஜியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சத்தியாக்கிரகி வினோவபா பாவே, இரண்டாவது சத்தியாக்கிரகி ஜவாஹர்லால் நேரு.

வினோபாவை சத்தியாக்கிரகத்தின் போது கைது செய்த சர்க்கார், நேருவுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை