பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

7


இந்தியாவிலே பிரகாசிக்கத் துணிந்த புதுமைப் பெண்களுக்குத் தனியான வாய்ப்புகளும் சிறப்புகளும் எதிர்ப்பட்டன. அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா சுதந்திரதாகத்தோடு வீறுகொண்டு எழுந்து நின்றது. அந்நிய ஆட்சியோடு சமரிட்டது. வெற்றி காணப் போராடிப் போராடி இன்னல்களை ஏற்க நேர்ந்தது. நாட்டிலே எவ்வளவோ மாறுதல்கள். சமூகத்திலே, குடும்பங்களில், தனி மனித வாழ்வில், எத்தனை எத்தனையோ மாற்றங்கள். அவற்றை எல்லாம் ஏற்று, சகித்து, அற்புத அனுபவங்கள் பெற்று, ஓங்கி உயர்ந்து, கெளரவங்கள் பல அடையும் பாக்கியம் இந்தியப் பெண்களில் பலருக்குக் கிட்டியது.

அத்தகைய பாக்கியம் பெற்ற பெண்களில் ஒரு பெண் ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட். அவர்கள் எல்லோரையும் விடத் தனி மாண்பு பெற்றுத் திகழும் மாதர் திலகம் அவள். புதுமைப் பெண்களுக்குப் பெருமை தரும் பெண்கள் நாயகம் அவள். அவர்களுடைய போற்றுதலுக்கு உரிய பெண்ணின் பெருமாள் அவள், இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திவரும் மணி அவள்.

நாட்டுக்காக மகத்தான தியாகங்கள் புரிந்த பண்டித மோதிலால் நேருவின் அருமை மகள் விஜயலக்ஷ்மி. இந்தியாவின் தவப் புதல்வர் ஜவாஹர்லால் நேருவின் தங்கை அவள். இவ்விரண்டு சிறப்புகளால் மட்டுமே அவள் பெருமை அடையவில்லை. மாண்புக்கு மாண்பு அளிக்கும் நற்சிறப்புகள் பலவும் விஜயலக்ஷ்மி பெற்றிருக்கிறாள். அவற்றின் துணையாலும், நாட்டின்