பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

விஜயலக்ஷ்மி பண்டிட்


விஜயலக்ஷ்மியின் கணவர் ரஞ்சித் பண்டிட் 1944-ம் வருஷம் உயிர் நீத்தார்.தேச சேவையில் ஈடுபட்டு, வாழ்வில் பத்து வருஷ காலத்தை அவர் சிறையில் கழிக்க நேர்ந்தது.அது அவர் உடல் நலனை மிகுதியும் பாதித்து வந்து, மரணத்தை சீக்கிரமே கொண்டு வந்தது.

அத்தியாயம் 15.

இந்தியா சுதந்திரம் பெற்றது. காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஜவஹர்லால் நேருவின் திறமையும், புகழும், அயல் நாட்டுக் கொள்கையும் உலக நாடுகளிடையே இந்தியாவுக்குத் தனித்த ஸ்தானம் பெற்றுத் தந்தன.

சுதந்திர இந்தியாவின் மதிப்பை உணர்த்தி, அயல் நாட்டு உறவை பலப்படுத்துவதற்காக நாடு தோறும் ராஜீயத் தூதுவர்களை நியமித்தது அரசாங்கம். விஜயலக்ஷ்மி சோவியத் ரஷ்யா சென்றாள், இந்தியாவின் ராஜீயத் தூதுவராக.

அந்நாட்டில் சில மாதங்கள் பணிபுரிந்து விட்டு அவள் அமெரிக்கா சேர்ந்தாள். அமெரிக்கா, மெக்ஸிக்கோ தேசங்களில் இந்திய அரசியல் தூதுவராகப் பொறுப்பு வகித்தாள். சுதந்திர இந்தியாவின் பிரதிநிதிகள் அடங்கிய கோஷ்டிக்குத் தலைமை வகித்து ஐக்கிய நாடுகளின் சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் அவளுக்கு கிட்டியது.

அந்தச் சபையின் தலைமைப் பதவி 1953-ம் வருஷம் விஜயலக்ஷ்மியை வந்து அடைந்தது. அறுபது நாடுகளிலிருந்து விஜயம் செய்யும் பிரதிநிதிகள் கொண்ட அந்தச்