பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனையாளர் சிலர்

13

அரிஸ்டாட்டிலையும் அவருக்குப் பின் வந்த கலிலியோவையும் கூறலாம். நிறை அதிகப் பொருளும் நிறை குறைவுப் பொருளும் ஒன்றாக ஒரே உயரத்திலிருந்து கீழ் நோக்கி நழுவவிடப் படுமானால் எந்த விகிதத்தில் நிறை அதிகமாக இருக்கிறதோ அதே விகித வேகத்தில் நிறை அதிகப் பொருள் மற்றதற்கு முன்பு தரையை அடைந்துவிடும் என்று அரிஸ்டாட்டில் தன் குறிப் பேட்டில் எழுதி வைத்தார். இது உண்மைதானாவென்று எவரும் ஆராய முன்வரவில்லை. கி.பி. 1590-ம் ஆண்டில் கலிலியோ என்பவர் முதன் முதலாக இதை ஆராயத் தொடங்கினார். இத்தாலியிலுள்ள பைசா நகரத்துப் பல்கலைக் கழகத்தில் கணக்கு வல்லுநராகப் பணியாற்றி வந்தார் இவர். அந்நகரிலுள்ள சாய்ந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து வெவ்வேறு நிறையிருந்த இரண்டு பொருட்களை நழுவ விட்டார். அரிஸ்டாட்டிலின் 'உண்மை'யைப் பொய்யென நிரூபித்துக்கொண்டு. எல்லாப் பொருட்களுக்கும் இழுவை விகிதம் (Acceleration) ஒன்றே என்று நிரூபித்துக் கொண்டு-இரண்டும் ஒரே சமயத்தில் தரையை அடைந்தன. பரிசோதனையைக் கோபுரத்தின் முன் காணக் கூடியிருந்த மக்கள் கூட்டம் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தது. ஜேம்ஸ் விரைசின் துணைவர்கள் பொறாமைப்பட்டது போலவே இவரது துணை ஆசிரி யர்களும் பொறாமை கொண்டு அவர் வேலையிலிருந்து நீங்கும்படியான துன்பச் சூழ்நிலையை உருவாக்கி வெற்றி கண்டனர். உலகில் எந்த உண்மைக்கும் முதலில் இத்தகைய வரவேற்புத்தானே !

காலத்தின் அடிச்சுவட்டில் பற்பல புதிய கொள்கைகள் உருவாகின்றன. 'விஞ்ஞானத்தின் தந்தை'