பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளாண்மை

17

வலிமை மிகுந்த விலங்கொன்றைக் கொல்ல இருவர் தேவைப்பட்ட போது இன்னொரு மனிதனுடன் தானும் சேர்ந்து வேட்டையாடி வெற்றி கண்ட மனிதன் கூட்டுறவின் உயர்வைத் தெரிந்தான். அதே சமயத்தில், உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுச் சிறிதளவு மாமிசமே இருவருக்கும் பொதுவாகக் கிடைத்தபோது அவனவன் வயிறே முதலில் நிரம்ப வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் உண்டாயது; அதனால் பகை மூண்டது. அன்றுதான் மனித இனத்தின் முதல் போர் நிகழ்ந்தது. அவனவன் வலிமையைப் பெருக்கி மாற்றானைச் சிதைக்க எண்ணியபோது பிறரைக் கூட்டமாகச் சேர்க்க இருவரும் மனிதனைத் தேடினார்கள். அன்று தான் கட்சி உருவாயிற்று. நாளுக்கு நாள் கட்சிகள் பெருகின.

ஒவ்வொரு கட்சியும் அதனதன் வலிமைக்கு ஏற்றவாறு விலங்குகளைக் கொன்று வயிற்றை நிரப்பிக் கொண்டன. குறிப்பிட்ட இடத்தில் உணவு கிடைப்பது அரிதான சமயத்தில் எல்லாக் கட்சிகளுமே நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டன.

அத்தகைய கூட்டங்களில் ஒன்று நைல் நதியை அடுத்த எகிப்திய மண்ணில் குடியேறிற்று. அங்கு அதன் உணவாக விலங்குகள் அனைத்தும் கொன்று தின்னப்பட்டன. அந்த இடத்தை விட்டு அக்கூட்டம் அடுத்த இடத்தை நோக்கிப் பயணம் கிளம்ப இருந்த அந்த நேரத்தில் அங்கிருந்தோருக்குப் புதிய அனுபவம் ஒன்று ஏற்பட்டது. மாமிசத்தை மட்டுமே உணவாகக் கொண்டிருந்த மனிதனுக்கு கிழங்கு கனிகளின் சுவை தெரியலாயிற்று. நைல் நதியின் ஓரங்களில் செழித்து வளர்ந்து

2