பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/3

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

யற்கைச் செல்வத்தின் பல கூறுகளுள் ஒன்று விஞ்ஞானம். இன்று நாம் விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். விஞ்ஞானக் கலை கி. பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் மேலை நாட்டில் வளரத் தொடங்கியது. மனிதனது முயற்சியின் பயனாகப் பல விஞ்ஞான விந்தைகளை இன்று காணுகின்றோம். இவ் வளர்ச்சியின் காரணமாய் உலக நாடுகளுள் நெருங்கிய தொடர்பும், கூட்டுறவும், ஒருமைப்பாடும் ஏற்பட்டுள்ளன. ஆனால் விஞ்ஞானத்தால் மன்பதைக்குக் கேடே விளைகின்றது என்று ஒரு சிலர் இன்று கூறி வருகின்றனர். இக்கூற்று அவ்வளவு பொருத்தமுடையதன்று. ஏனெனில் கேடும் ஆக்கமும் அக் கலையைப் பயன்படுத்தும் முறையைப் பொறுத்தன ஆகும்.

உலகிற்குப் பல வகையிலும் ஆக்கம் தந்து, ஒருமைப் படுத்தும் விஞ்ஞானத்தின் கதையை—வளர்ச்சியை அறிந்து கொள்ளுதல்