பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

விஞ்ஞானத்தின் கதை


2. ஒருவன் அடுத்தவனுடைய எலும்பை முறித் தால் அவர்கள் அவனது எலும்பை முறிக்கலாம்.

3. ஒருவன் இன்னொருவனுடைய அடிமையின் கண்ணைப் பழுதாக்கினல், எலும்பை முறித்தால், அந்த அடிமை வாங்கப்பட்ட விலையில் பாதித் தொகையைக் கொடுத்து ஈடு கட்டலாம்.

ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு உண வப் பொருளை நதியின் வழியாக எடுத்துச்செல்ல படகுகள் பயன்பட்டன. நிலத்தின் வழியாக இத் தகைய போக்கு வரவு வண்டிகளின் மூலமாக நடை பெற்றது. முதலில் வண்டிகள் மனிதர்களாலேயே இழுத்துச் செல்லப்பட்டன. உலோகக் காலம் தோன் றியபின் வண்டி சீர்திருத்தப்பட்டு விலங்குகளால் இழுக்கப்பட்டன.

கால ஓட்டத்தின் முன்னேற்றத்தால் பல்வேறு வகைப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்று விஞ் ஞானிகள் உணவுப் பெருக்கத்திற்கு அடிகோலியிருக் கிருர்கள். மழைக் குறைவால் விளைவிக்கப் படாது பாழாக விடப்பட்ட நிலங்களெல்லாம் இன்று பயிர்த் தொழிலுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. வேளாண்மைத் துறையில் ஈடுபட்டிருக்கும் அறிவியலாரின் கவனத்தை இன்று கவர்ந்திருப்பது நிலப்பரப்புக்குத் தகுதியான விதைகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவது ஆகும். எடுத்துக் காட்டாக, குளிர் மிகுந்த நிலப்பரப்புக்களில் விளைவதற்கு ஏற்ற புதுவிதமான கோதுமை விதைகளை அவர்கள் இப்போது கண்டுபிடித்திருக்கிருர்கள். இதேபோன்று பாலை நிலங்களில் விளையக்கூடிய விதைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிருர்கள்.