பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

விஞ்ஞானத்தின் கதை

ஆற்றுப் பகுதியில் இத்தகைய செங்கற்களைக்கொண்டு வியப்புக்குரிய கட்டிடங்கள் உருவாயின.

இந்தியர்களும் சீனர்களும் கட்டிட வேலைப்பாடுகளில் சிறந்து விளங்கினார்கள். தமிழ்நாட்டுக் கோவில்களும் சீனநாட்டுக் கோவில்களும் இதற்கு இன்றும் சான்று கூறுகின்றன. எகிப்தியர், இந்தியர், சீனர், கிரேக்கர் முதலியோர் கட்டிட நுட்பங்களை ஒரே மாதிரியாகக் கையாண்டனர்.இரண்டு சரிசமமான தூண்களை நிறுத்துவதும் மேலே குறுக்காக மரப் பகுதியொன்றைப் பொருத்துவதும் இவர்கள் எல்லோரும் வாயில் நிலைப் படியை உண்டாக்க வழியாக இருந்தது. வளைவுப் பகுதிகளை உண்டாக்க அன்று அறியப்படாதிருந்தமையின் இந்நாடுகளில் இம்முறை கையாளப்படவில்லை. வளைவுகளை இணைத்துக் கட்டும் முறை முதலில் உரோமானியரால் கையாளப்பட்டது. பின்னர் இவர்களிடமிருந்து அரபுநாட்டு முகமதியர் கற்றுக்கொண்டு தாம் வெற்றிகண்டு ஆட்சி புரிந்த எல்லா நாடுகளிலும் பரப்பினர். இதை அடிப்படையாகக்கொண்டு மத்திய காலத்தில் (கி.பி.1200-1500) கிறித்தவர்கள் தங்கள் கோவில்களைக் கட்டி அலங்கரித்தனர்.

மனப் பிணக்காலும், கட்சிப் பூசல்களாலும், மன வெறியாலும் காலம் நெடுகிலும் போர்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததை வரலாறு வாயிலாக நாம் அறிவோம். இந்தப் போர்கள் மனித குலத்தைச் சிதைத்து வந்திருக்கின்றன. ஆனாலும் கட்டிடக் கலையை இவை வளர்த்திருக்கின்றன என்று கூறலாம். பகைவர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், தம் உடைமைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும்