பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மானங்காத்த மனிதன்

41

கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட் என்ற ஆங்கிலேய விஞ்ஞானிக்கு இதில் பெரும் பங்கு உண்டு. மின்சாரம் வழக்கிற்கு வந்த பின் பழைய முறைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன. பல்லாயிரக் கணக்கான இராட்டைகளும், கைத்தறிகளும் செய்யக்கூடிய வேலையை மின்சாரத்தின் உதவியால் இயந்திரங்கள் எளிதில் முடித்து விடுகின்றன. இதனால் இந்தியா பெரும் அளவு பாதிக்கப்படுகின்றது. கைத்தறி நெசவாளர் படும் துயரம் கண்ணீர் வடிக்கத்தக்கதாய் உள்ளது. கிராமக் கைத்தொழில்கள அழிவைக் காணுகின்றன. மகாத்மாகாந்தி இதைக் கண்டித்துக் குரல் கொடுத்தார்; கதராடை அணியும் விரதத்தை மேற்கொண்டார். அன்னாரது உதவியால் பெற்ற சுதந்திர நாட்டை இயக்கிவரும் அரசியலார் இயந்திர சாலைகள் பலவற்றை இன்று நாடெங்கிலும் தொடங்கி வைக்கிறார்கள்.

நூலாடைகளையும் கம்பளி ஆடைகளையும் தவிர்த்து தற்பொழுது புதுவகையான உடைகள் வழக்கிற்கு வந்திருக்கின்றன. ரேயான் அல்லது செயற்கைப் பட்டு இவற்றில் குறிப்பிடத்தக்கதாகும். இயற்கையில் பட்டுப்பூச்சி நூலைத் தயாரித்ததை உற்று நோக்கிய மனிதன் தானும் அதேபோல் பட்டு நூலைத் தயாரிக்க எண்ணினான். பட்டுப் பூச்சிகள் உணவாகக் கொண்ட முசுக்கட்டை மரத்தின் இலைகளைக்கொண்டு அம்முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். பின்னர், முசுக்கட்டை மரத்தில் இருக்கும் ஸெலுலோஸ் சத்துப் பொருளே எல்லா மரங்களிலும் இருப்பதை அறிந்த அவன் செயற்கைப் பட்டுநூலைத் தயாரிக்க எல்லா மரங்களையும் பயன் படுத்திக் கொண்டான். மரம் முதலில்