பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

விஞ்ஞானத்தின் கதை

ஒரு கலையாகக்கூடத் தீர்மானிக்கப்பட்டது. கிரேக்க நாட்டு மருத்துவரான ஹிபாக்கிரிட்டீஸ் அற்றை நாளில் தனது குறிப்பேட்டில் "வாழ்வு சிறிது; வளர் கலைபெரிது. சந்தர்ப்பங்கள் அரிதே கிடைப்பவை; சோதனைகள் பயங்கரமானவை. ஆராய்ச்சியின் முடிவு நிலை இல்லாதது. ஆயினும் நாம் (மருத்துவர்) நமது கடமைகளை ஒழுங்குறச் செய்யவேண்டும்; ஆனாலும் நோயாளி, துணையாட்கள், சூழ்நிலைச் சந்தர்ப்பங்களின் ஒத்துழைப்பு மிகத் தேவை" என்று எழுதி உள்ளார்.

அன்றைய மருத்துவரின் வாழ்க்கை எவ்வளவு பயங்கரமானது—நிலையற்றது!

இப்படிப்பட்ட நிலையிருந்தும் ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தினால் சில மருத்துவர்கள் நோயின் தன்மையையும், மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் அறிய தங்களுக்குத் தாங்களே நோய்களை வரவழைத்துக் கொண்டனர்; மருந்துகளைப் பிரயோகித்தனர். அவர்கள் பிழைத்தால் மருத்துவத்துறைக்கு வெற்றி; மருத்துவத்துறை முன்னேறும். இல்லையேல் உலகம் வாழத் தங்களைத் தியாகம் செய்த பலரது பட்டியலில் அவர்கள் பெயரும் சேரும். உலகம் முன்னேற அணு அணுவாக விஞ்ஞானிகள் எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி நேர்ந்ததை இது உறுதிப்படுத்துகிறது.

உடல் எங்கும் இரத்தம் பாய்கிறதென்று முதலில் கண்டவர்கள் சீனர்கள்தாம். இந்த உண்மை நெடுங் காலம்வரை மேலை நாட்டவர்க்குத் தெரியாது. படுவா கலைக் கல்லூரியில் பயின்ற வில்லியம் ஹார்வி இரத்த ஓட்டம் சம்பந்தமாக கி.பி. 1628-ல் தம் நூலைப் பிரசுரித்த பின்பே மேலை நாடுகளில் உடற் கூற்றின்