பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோயற்ற வாழ்வு

49

இத்துறை பற்றி ஆராய்ச்சி முளைவிட்டது. இருதயத்தின் ஒருபுறமாக இரத்தம் உட்புகுந்து மறுபுறமாக அது வெளியேறுகிறதென்று மட்டும் ஹார்வியால் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அவரால் விளக்கமுடியவில்லை. செத்த உடல்களை வெட்டி நுண்ணிய ஆராய்ச்சி செய்த இந்துக்களையும், சீனர்களையும் பின்பற்றி ஆராய்ச்சிசெய்த மால்பீகி என்பவரால்தான் உண்மை புலப்படுத்தப்பட்டது. மயிரிழைபோன்ற தந்துகிக்குழாய்கள் மூலம் இரத்த ஓட்டத்தின் போக்கு நிர்ணயிக்கப் பட்டதை அவர் சோதனைகள் பலவற்றின்மூலம் கண்டுபிடித்தார். அவருக்குப் பெரும் துணைபுரியும் வகையில் அவருடைய காலத்தில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. மால்பீகி என்பவர் ஹார்விக்கு அடுத்து வாழ்ந்தவர்.

உலக மக்கள் விஞ்ஞானிகளுக்கு மிகுந்த நன்றி தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை கி.பி. 1847-இல் நிகழ்ந்தது. அதற்கு முன்னால் இரண சிகிச்சை என்பது சித்திரவதைக்கு மறுபெயராக இருந்து வந்தது. கையில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை அறுத்துச் சோதிக்க வெட்டரிவாளும் ரம்பமும் உபயோகிக்கப்பட்டன. நோயாளி கதறக் கதற அவனைக் கொல்லர் பட்டறைப் பொருளாக மதித்திருந்த அவல நிலையை மாற்றும் வண்ணம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் சிம்ப்சன் என்பவர் குளோரஃபார்ம் என்ற மயக்க மருந்தைக் கண்டுபிடித்து இரண சிகிச்சையில் புதுப் பாதை அமைத்தார்.

உடம்பில் ஏற்படும் ஊமைக் காயங்களையும் முறிவுகளையும் காணுவதற்கு கி.பி. 1895-இல் ஜெர்மனியைச்

4