பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

விஞ்ஞானத்தின் கதை

சேர்ந்த ரான்ட்ஜன் அறிமுகப்படுத்திய எக்ஸ்-ரே கதிர்கள் மிக்க உதவிபுரிந்தன. காசம்போன்ற நோய்களைத் தீர்க்க இக்கதிர்கள் இக்காலத்தில் பயன்படுகின்றன. இதனை அடுத்து க்யூரி அம்மையார் கண்டு பிடித்த ரேடியக் கதிர்களும் மனித குலத்திற்குக் குறிப்பிடத் தகுந்த பணிபுரிந்து வருகின்றன.

எத்தனை விஞ்ஞான அதிசயங்கள் தோன்றினும் மனித குலத்தில் “சாவு இல்லாமல் செய்யமுடியுமா?" என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்குப் பதில் அளிப்பதுபோல் மருத்துவத்துறை அரிய சாதனை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நுரையீரல் சிறிது காலத்திற்கு வேலை செய்யாது நின்று விடுமானால் இந்த இடைக்காலத்தில் மட்டுமே வேலை செய்ய செயற்கை நுரையீரல் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால் மூச்சடைப்பு, எதிர்பாராத செய்திகளால் மாரடைப்பு, நினைவு தப்புதல் முதலியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தச் செயற்கை நுரையீரல்கள் இப்போது அதிகமாகப் பயன்பட்டு வருகின்றன. இதைப் போலவே முறிவு கண்ட உடலுறுப்புக்கள் பிளாஸ்டிக்கினாலான செயற்கை உறுப்புக்களால் நிறைவு பெறுகின்றன. இறந்த மனிதனைக்கூட ஐந்து நிமிட நேரம் உயிர் பிழைக்க வைக்கும் விந்தை இப்போது மருத்துவத் துறையின் வெற்றியாக விளங்குகிறது. நோய் உண்டாகாமலும், பரவாமலும் இருக்க உணவும் நீரும் சீர்திருத்தப்பட வேண்டும். நீரைச் சுத்தப்படுத்த அங்கங்குள்ள அரசாங்க அதிகாரிகள் விஞ்ஞானிகளின் துணைகொண்டு மக்களுக்கு ஆவன