பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. கலை

 குழந்தை எப்போது சிரிக்கிறது? குழந்தை மழலை பேசி எப்போது சூழ்ந்திருப்பவரை மகிழ்விக்கிறது?

அது பூரண உடல் நலம் பெற்றிருக்கவேண்டும். அதற்குத் தேவையான உணவு அளிக்கப்பட்டு நிம்மதியாக ஒருமுறை தூங்கி எழுந்துவிட்டால் குழந்தையின் உற்சாகத்தைப் பற்றிக் கேட்கவேண்டியதில்லை. ட்ரூ... பப்...ட்ரூ... க்ளக்...பூ...ம்...இப்படி அதன் சங்கீதம் உருப்பெறுகிறது.

இதுதான் கலையின் பிறப்பு!

மழலைப் பருவம் தாண்டியபின் குழந்தையின் கையில் எழுதுகோல் ஏதேனும் கிடைத்தால் அது வீடு முழுவதும் கிறுக்கிவிடுகிறது. அந்தக் கிறுக்கலுக்கு என்ன பொருள் என்று அந்தக் குழந்தைக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது. ஆனால் மகிழ்வடைந்த ஒர் உள்ளத்தின் பதிவுக்கோடு என்று மட்டும் நாம் அதைத் துணிந்து கூறலாம்.

இந்த இரு எடுத்துக்காட்டுக்கள் மூலம் கலை எப் பொழுது பிறக்கிறது என்று சற்று சிந்திப்போம்.

கலை எப்பொழுது பிறக்கிறது?

உடலும் உள்ளமும் நிறைவு பெற்று பூரித்து எழும் மகிழ்ச்சியை அல்லது எண்ணத்தை வண்ணமுடன் வெளியிட வேண்டுமென்று மனிதன் முயலும்போது தான் கலை பிறக்கிறது. ஒவியம், கவிதை, சிற்பம், நட-