பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

விஞ்ஞானத்தின் கதை

காகிதம் இயந்திரங்களின் உதவியால் செய்யப்படுகின்றது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் புத்தகத் தயாரிப்பு கையினாலேயே செய்யப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரு புத்தகத்தைத் தயாரிக்க நெடுநாட்கள் ஆயினமையால் புத்தக வெளியீடு அபூர்வமாயும், அதிக விலையுள்ளதாயும் இருந்தது. சீனா இத்துறையில் புதிய வளர்ச்சியைக் காட்டியது. சிறு சிறு மரக்கட்டைகளில் சொற்றொடர்களைச் செதுக்கி, அவற்றை வரிசைப் படுத்தி, அவற்றின் மேற்பரப்பில் மை தடவி.காகிதத்தின்மீது அழுத்தினார்கள். அதுவே முதல் அச்சாகும். இந்த முறை பழக்கத்திற்கு வந்த போது, படம் எழுதி அதை எழுத்தாகப் பாவிக்கும் நிலை மாறி மொழிக்கு உதவும் எழுத்துக்கள் புனையப்பட்டன. சீனர்கள் கண்டுபிடித்த அச்சுமுறையை கி.பி.1450- இல் ஜெர்மானியர்கள் பின்பற்றி எழுத்துக்களை தனித் தனியே மரக்கட்டைகளில் செதுக்கினார்கள். எழுத்துக் கட்டைகள் கோர்வையாக அடுக்கப்பட்டு அச்சுத் தொழில் முன்னேறிற்று. அச்சு இயந்திரங்கள் புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின; வியப்பூட்டும் வகையில் மனித அறிவை வளர்த்தன. அச்சு இயந்திரங்களைப் போல வேறெந்தப் புதுமையும் மனித குலத்தை வேகமாக வளர்க்கவில்லை. இம்மலர்ச்சிக்குப் பின் செய்தித்தாள்களும், வார-மாத ஏடுகளும் கணக்கற்று உருவாயின. கையினால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த அச்சு இயந்திரங்கள் பின்னர் நீராவித் திறனாலும் மின்சாரத் திறனாலும் இயக்கப்பட்டன. இப்போது வழக்கில் இருக்கும் 'லினோடைப்' அச்சு இயந்திரங்கள்