பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

விஞ்ஞானத்தின் கதை

வென்றால் சைக்கிளை ஓட்டினாலோ நிறுத்தினாலோ சிறிய சக்கரம் பெரியதை அநுசரித்து இருப்பதில்லை. தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு ஓடும்; நிற்கும். சக்கரங்களின் ஒத்துழைப்பு இல்லையேல் சவாரி செய்பவர் கீழே விழவேண்டியதைத் தவிர வேறு வழி! எனவே அந்நாளில் சைக்கிள் வைத்திருந்த ஒவ்வொருவரும் திறமை படைத்க சர்க்கஸ்காரர்களே! கி.பி. 1867-இல் தான் லாசன் என்ற ஆங்கிலேயர் சைக்கிளை இப்போதுள்ள உருவுக்குக் கொண்டு வந்தார். ஆனால் சக்கரங்கள் கெட்டியான ரப்பரால் ஆனவை. காற்றடைத்து ஓட்டும் புதுமையை டன்லப் என்பவர்தான் கண்டுபிடித்தார்.

இன்று அச்சத்தினாலோ, பொருள் தேடும் ஆசையினாலோ மனிதன் பயணத்தைக் கைக்கொள்ளவில்லை. அறிவைப் பெற மனிதன் எவ்வித இன்னலுக்கு உள்ளாகவும் தயாராக இருக்கிறான். அறிவுத்தாகம் பெருகப் பெருக உள்ளம் விம்மும். மனிதன் மேலும் மேலும் அனுபவங்களைப் பெற்று, அறிவிலே தெளிவைப் பெறுகிறான். ஒரே இடத்தில் எல்லா அனுபவங்களும்-எல்லா அறிவும் கிடைப்பதில்லை. எனவே அறிவைத் தேடியும் மனிதன் இடம் விட்டு இடம் பயணம் செல்லுதல் இன்று முக்கிய மாகிறது.


—————