பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

விஞ்ஞானத்தின் கதை

சில காலத்திற்குப்பின் மின்சாரத்தை ஒரு சாடியில் தேக்கி வைக்கும் முயற்சி நடைபெற்றது. மின்சாரம் என்பது உருவற்ற, எடையற்ற ஏதோ ஒரு பொருள் என்பது அந்நாளையக் கருத்து. கி. பி. 1745-இல் வான் க்ளீச்ட் என்ற குடியானவர் ஒரு சாடி செய்து ஓர் ஆணியைப் பொருத்தி மின்சாரம் உள்ளே உண்டாவதற்கான வகைகள் செய்தார். சாடியை இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் ஆணியைத் தொட்டபோது க்ளீச்ட் ஒரு வகை அதிர்ச்சியை உணர்ந்தார். அதுதான் முதன் முதல் உணரப்பட்ட மின்சார அதிர்ச்சி. சில மாதங்களுக்குப் பின் ஹாலண்டு நாட்டைச் சேர்ந்த முச்சென்புரோக் என்பவர் இதே வகையான சாடியைத் தயாரித்தார். இவர் விஞ்ஞானச் சாதனங்களைத் தயாரித்துக் கொடுத்து பல விஞ்ஞானிகளுக்கு நண்பராக விளங்கியவர். ஹாலண்டு நாட்டில் உள்ள லீடன் நகரில் இம் முயற்சி தொடங்கப்பட்டதால் அந்த சாடிக்கு லீடன் சாடி என்று வழங்கப்பட்டது. இச் சாடி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அந்த சாடியிலிருந்த ஆணியைத் தொட்டுப் பார்த்து அதிர்ச்சி காணுவதில் மகிழ்வடைந்தனர். இத்தகைய விந்தை மிக்க மின்சாரம் அரசவைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு விநோதப் பொருள்களில் ஒன்றாகக் கண்காணிக்கப்பட்டது. பிரான்சுநாட்டு மன்னன் தன் அரசாங்க அலுவலர்களை எல்லாம் தன் சபையில் கூட்டிவைத்து லீடன் சாடியில் அவர்களை கை வைக்கச்சொல்லி அவர்கள் அதிர்ச்சி அடைந்த போது அவர்களோடு சேர்ந்து அவனும் களிப்புற்றான். பின்னர் சில நாட்களில் இத்தகைய மின்சாரக்