பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

-டதும், த ம் மு ைட ய வாளைக் கையில் எடுத்துக் கொண்டு கச்சேரியில் சமர்ப்பிக்க மறுத்தார். அதி காரிகள் வற்புறுத்தினர்கள். ஆனல் ஜனங்கள் ஜோஸப்புக்கு ஆதரவாகத் திரண்டெழுந்தார்கள். அதைக் கண்ட ஊர்க் தலைவன் பட்டாளத்தலே வனுக்கு ஆள் அனுப்பினன். அவன் எந்தப் போர் வீரனும் ஜோஸப் மாதிரிதான் செய்வான் என்று சொல்லி உதவி செய்ய மறுத்து விட்டான். ஆகவே ஜோஸப் பாஸ்ட்டியர் ஜனங்கள் ஆரவாரிக்கத் தம்முடைய உடைவாளோடு வீடுவந்து சேர்ந்தார். அவர் தம்முடைய வீட்டில் நெப்போலியச் சக்கரவர்த்தியின் படங்களை மாட்டிவைத்திருந்தார். அந்தச் சக்கரவர்த்தியின் புகழ்பெற்ற போர்ச் சரிதை நூல்களை அலமாரியில் அடுக்கி வைத்திருக் தார். அவைகளை எடுத்து ஒய்வு கிடைக்கும் நேரங் களில் படித்துக் கொண்டிருப்பார். ஆயினும் அவர் தம்முடைய சொந்த வீரப் பிரதாபங்களைப் பற்றி யாரிடமும் பிரஸ்தாபிப்பது கிடையாது. அவர் எப்பொழுதும் தம்முடைய தோல் பதனிடும் வேலை யிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தார்.

அவருடைய தோட்டத்துக்கு எதிர்த் தோட்டத் தில் அடிக்கடி ஒரு யுவதி வந்து வேலை செய்வதைப் பார்த்து, அவளைப் பற்றி விசாரித்தார். அவ ஞடைய கற்குணங்களை அறிந்ததும் அவளே க் தமக்கு மணம் செய்து தருமாறு அவளுடைய பெற் ருே.ரிடம் வேண்டிக் கொண்டார். அவர்களுடைய மணத்தின் பயனப் அவர்களுக்கு மூன்று பெண் 101