பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியrர்கள்

கவலைகொள்வார். அவருடைய மாணவர்கள் அவ: ரைப் பார்க்க வருவார்கள். அவர்களுக்கு உழை. மின் சலியாது உழைமின்’ என்று தம்முடைய மூலமந்திரத்தை உபதேசித்து வந்தார்.

அவருக்கு நாளுக்குநாள் கதிணம் அதிகப் பட்டுக் கொண்டே வந்தது.ஆகவே 1895-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 27-ம் தேதியில் எழுபத்து மூன் ருவது வயதில் விண்ணுலகம் எய்தினர். அவரை அவர்பெயரால் அமைக்கப்பெற்ற சிகிச்சைசாலைத் தோட்டத்திலேயே அடக்கம் செய்தார்கள். அவர் உலகத்துக்குச் செய்துள்ள உதவிக்கு அறிகுறி யாக, அவருடைய கல்லறையின் அருகில் அவரால் காப்பாற்றப்பெற்ற ஜோஸப் மீஸ்ட்டர் என்னும் சிறுவனுடைய சிலையே கிறுத்திவைத்திருக்கிருரர் கள். அத்தகைய சிகிச்சைசாலைகள் சகலதேசங் களிலும் அமைக்கப்பெற்று, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்து வருகின்றன. ஆமாம், அவர் அன்று பிரான்ஸ் தோற்று கின்ற் துயர்க் கோலத்தைக் கண்டு, அந்த இழிவைப் போக்குவேன் என்று கூறிய வாக்கை கிறைவேற்றிவிட்டார். அந்த காட்டின் முடிசூடா அாயிப் பெரியார் ஆய்விட்டார்.

154