பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

ஆல்ை ரேடியம் வந்து அந்த எண்ணத்தை மாற்றி விட்டது. பூமி உஷ்ணத்தை இழந்தால் என்ன ? அதிலுள்ள ரேடியம் புதிது புதிதாக உஷ் னத்தை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறதல் லவா ? அப்படி உஷ்ணம் உண்டாக்கும் ரேடியம் அதிகமாகக் காணப்படுவது சில இடங்களில்தான். ஆயினும் அது காணப்படாத இடமே கிடையாது. அந்த ரேடியத்தை எல்லாம் சேர்த்துப் பார்த்தா அலும் அற்பமாகவே இருக்கும். ஆனல் பூமியை எப்பொழுதும்போல் உஷ்ணமாக வைத்திருக்க அக்தச் சொற்ப ரேடியமே போதும் என்று அறி ஞர்கள் கூறுகிருரர்கள்.

பூமியின் வயதைப் பற்றியும் புலவர்கள் பலவா ருகச் சர்ச்சைசெய்து வந்தார்கள். அது சூரிய னிடமிருங்கே பிரிந்து வந்த படியால் அதன் வயது சூரியனுடைய வயதே என்றும் அவனுடைய உஷ் ணத்தைக் கணக்கிட்டால் அவனுடைய வயது மூன்று கோடி வருஷங்களாகும் என்றும் கெல்வின் என்னும் அறிஞர் கூறுகிரு.ர்.

ஆனல் கில நூல் புலவர்கள் பாறைகள் உண் டாவதற்கு வேண்டிய காலத்தைக் கணக்கிட்டு பூமியின் வயது 10 கோடி வருஷங்கள் என்றும், உயிர் நூல் புலவர்கள் ஜீவராசிகள் வளர்ந்து வங் துள்ள காலத்தைக் கணக்கிட்டு பூமியின் வயது 50 கோடி வருஷங்கள் என்றும் கூறுகிருரர்கள்.

ஆனல் ரேடியமானது பூமியின் வயதை இன்

லும் அதிகமாக்கிவிட்டது. அதுபோன்ற சுயம்பி ர 153