பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

-

ஆல்ை அவர் எதையும் ஆராய்ச்சி செய்யாமல் ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் விஞ்ஞானிக ளுடைய லட்சணம்.

சிறு வயதிலிருந்தே அவர் அடிக்கடி கேள்வி கள் கேட்டுக்கொண்டே இருப்பாராம். ஆதலால் பகலில் புஸ்தகம் பைண்ட் செய்துவிட்டு இரவில், ாஸாயனத்தைக் குறித்தும் மின்சாரத்தைக் குறிக் தும் அநேக பரிசோதனைகள் நடத்திவந்தார். அவருக்குச் சொற்ப சம்பளங்தான். ஆனாலும் அதில் இரண்டு மூன்று அணு மிச்சப்படுத்திச் சோதனைகளில் செலவுசெய்து வந்தார். மின்சr ரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சிறு யந்திரத் தைக் கூடச் செய்து பார்த்தார்.

அக்தச் சமயம் தாத்தம் என்பவர் ஒருவர் ரிஸாயனம் சம்பந்தமாகப் பிரசங்கங்கள் செய்வ தாகக் கேள்வியுற்று அவற்றைப் போய்க் கேட்க ஆசை கொண்டார். எஜமானர் அனுமதி அளித் தார். அண்ணன் அதற்குரிய பணத்தைத் தங் தாா.

இந்த விதமாக மைக்கேல் பாரடே தம்மு டைய அறிவை விஞ்ஞானத் துறையில் அபிவிர்த்தி செய்துகொண்டிருந்தார். இதன் காரணமாக அவ ருக்கு வியாபாாக்கில் வெறுப்பும் விஞ்ஞானத்தில் விருப்பும் உண்டாய்க்கொண்டு வந்தன. மைக்கேல் புஸ்தகங்களைப் பைண்ட் செய்தபோதிலும் மன மானது மா லை யி ல் செய்ய உத்தேசித்தி ருந்த ரஸாயனப் பரிசோதனைகளைப் பற்றியே

70