பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

ஆர்வமும் புலனுகின்றன.

அவர் தாயாருக்கு எழுதிய முதல் கடி தத்தில் ‘எந்தநேரமும் இங்கிலாந்தையும் வீட்டையும் நண்பர்களையுமே எண்ணி வருகின் றேன். ஏதேனும் அசெளகர்யம் ஏற்படும் பொழு தெல்லாம் வீட்டிலுள்ளோரைப்பற்றி நினைப்பது எனக்குப் பெரிய ஆறுதல் அளிக்கின்றது. இது தான் மனிதவாழ்வில் அடையக்கூடிய தலைசிறந்த இன்பமாகும் ‘ என்று எழுதுகின்றார்.

தம்முடைய நண்பருக்கு எழுதிய கடிதத்தில் நான் இதுவரை பெற்றுள்ள அறிவெல்லாம் என் னிடமுள்ள அறியாமையை அறிந்து கொள்வதற்கு வேண்டிய அறிவேயாகும். அதனல் என்னுடைய அறியாமையைக் கண்டு காணுகின்றேன். அதை நீக்குவதற்குக்கிடைக்கும் எந்தச்சக்தர்ப்பத்தையும் நழுவ விட்டு விடாதிருக்க முயன்று வருகின்றேன்’ என்று எழுதுகின் ருர்.

இந்தவிதமாக அவர் டேவியுடன் இரண்டு வருஷ காலம் ஐரோப்பாவில் சுற்றுப்பிரயாணம் செய்து தம்முடைய அறிவை அபிவிர்த்தி செய்து கொண்டு வந்தார். இங்கிலாந்துக்குக் கிரும்பி வந்த தும் டேவிக்கு உதவி செய்யும் உத்தியோகத்தில் அமர்ந்தார்.

அடுத்த வருஷம் 1816ல் தத்துவ சங்கத்தில் ரளாயண சாஸ்திரம் சம்பந்தமாகப் பிரசங்கம் செய் தார். டேவியுடன் சேர்ந்து இரண்டரை வருஷ 12 177