பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

செய்துவர்தார். அதன் பயனுக அவருடைய முதல் ஆராய்ச்சிக் கட்டுரை 1816ம் வருஷத்தில் அதாவது ஐரோப்பாவிலிருந்து திரும்பிவந்த மறு வருஷம்புஸ்தக பைண்ட் வேலையை விட்டு வந்து மூன்று வருஷ கால மாவதற்கு முன்னதாகவே- விஞ் ஞான மாசிகை'யில் பிரசுரமாயிற்று. அவர் அறிவு அபிவிர்த்தியிலும் விஞ்ஞான ஆராய்ச்சியிலுமே தம்முடைய இருதயம் முழுவதையும் ஈடுபடுத்தி யிருந்தார். மணம் செய்ய வேண்டிய பருவம் அடை ந்தும் அவருடைய மனம் அதில் செல்ல வில்லை. அதுமட்டுமன்று. அந்தக்காலத்தில் பல சமயங் களில் தம்முடைய குறிப்புப் புஸ்தகத்தில் காத லுக்கு விரோதமாகப் பல எழுதி வந்தார். மனி தனை நாசமாக்கும் நோய் காதலே என்ற பொரு

ளுடன் கூடிய ஒரு பாடலைக் கூட இயற்றினர்.

ஆயினும் அவருடைய நண்பர் எட்வார்ட் பர் ர்ைட் என்பவர் அவர் காதலைக்கடிந்து எழுதியிருந்த கட்டுரைகளைத் தமது தங்கை ஸாராவிடம் காட்டி னர். அதன்பின் பாரடே ஸாராவைச் சந்திக்கநேர்க் தது. அவ்வளவுதான் பாரடே காதல்நோய்க்கு ஆளாய்விட்டார். ஆனல் அவர் கருதிய வண்ணம் அவரை காச மாக்குவதற்கு மாருக அது அவருக்கு 47 வருஷம் பேரின்ப் வாழ்வைய்ே அளித்தது. === ராயல் ஸ்தாபனத்தார் 1821ல் அவரை அதன் ஸ்தானதிபதியாக நியமித்தார்கள். அதல்ை அந்த வருஷம் சூன் மாதத்தில் ஸாரா பெர்னர்ட் அம்மை யாரை மணந்துகொண்டார். மணநாளும் மற்ற 179