பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கன்

அவ்விதம் கவிஞர்களைக் கூடக் கவரும் வண் ணம் பிரசங்கமாரி பொழிந்த அந்த விஞ்ஞானப் பெருகாவலருக்கு அப்பொழுது வயது 22 தான். இந்தச் சிறுவயதிலேயே கஷ்டமான விஷயங்களை அழகாகப் பிரசங்கிக்கக்கூடிய இவர் அதிகமாக பள்ளிக்கடடத்தில் படித்ததில்லை."என்னிடத்திலுள் ளது எதுவோ அதை எல்லாம் நானேதான் சிருஷ் டித்துக்கொண்டேன்’ என்று அவரே ஒருசமயம் கூறினர்.

அவர் நாவன்மையுடன் விஞ்ஞான அறிவு புகட்டிய பெருமை ஒருபுறமிருக்க, அவர் உலகக் துக்கு உபயோகமான புதிய சாதனங்கள் பல அளித்துள்ள பெருமையே அதிகமாகும்.

அத்தகைய டேவி ஆங்கில காட்டில் 1778-ம் வருஷத்தில் பென்ஜான்ஸ் என்னுமிடத்தில் பிறக் தார். கல்விகற்கப் பாடசாலை சென்றபோதிலும் அதிகமான சோம்பலை அனுபவித்ததாகவே கூறு கிருரர். உடன்படித்த பிள்ளைகளுக்குக் கதை சொல் வதிலேயே அதிகக் கருத்துடையவராக யிருந்தார். கதை சொல்லுவதற்கு ஆள் கிடைக்காவிட்டால் காற்காலியின் மேல் தன்னங் தனியாகவே கின்று கொண்டு பிரசங்கம் செய்வாராம். இந்தப் பழக்கம் தான் பிற்காலத்தில் அவரை விஞ்ஞானப் பிரசங் கம் செய்வதில் ஆசை உடையவராகவும் சாமர்த்திய முடையவராகவும் செய்ததுபோலும்.

அவருடைய ஆசிரியர் குழந்தைகள் தவறு செய்தால் அவர்களுடைய காதுகளை முறுக்குவது 200