பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஹம்ப்ரி டிேவி

பொழுது அவர் ‘டேவி நீர் சிறுவயதாயிருப்பதால் பிரசங்கம் செய்யமுடியாது. ஆராய்ச்சிகள் மட்டும் செய்யலாம்” என்று கூறினர். ஆனல் டேவி தமக் குப் பிரசங்கம் செய்யக்கூடிய ஆற்றல் உண்டு என்.று வற்புறுத்தினர். அப்படியால்ை இப் பொழுது ஒரு பிரசங்கம் செய்யும், பார்ப்போம் என்று ரம்போர்டு கூறினர். டேவி தனியாகநின்று பிரசங்கம் செய்து பழகியிருந்தபடியால் அங் த கி.மி வ;.மே யாதொரு சங்கோசமுமின்றி அழகான பிர சங்கம் ஒன்று நிகழ்த்தினர். அதைக் கேட்டதும் பிரபு ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்து அவருக்

குப் பிரசங்கம் செய்ய அனுமதி அளித்தார்.

அது முதல் டேவி செய்த பிரசங்கங்களேக் கேட்க ஆயிரக் கணக்கான மக்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தார்கள. அவருடைய சாமர்த் தியத்தைக் கண்டு அந்தச் சங்கத்தின் அதிகாரிகள் இரண்டு வருஷங்கள் செல்லுமுன்பே அவரையே சங்கத்தின் அத்யட்சகராக நியமனம் செய்தார்கள். டேவி பிரசங்கம் செய்யும் நேரம் தவிர மற்ற கோமெல்லாம் வி ஞ் ஞான ஆராய்ச்சியிலேயே செலவுசெய்து வந்தார். ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அ ைத ப் பரிபூரணமாக ஆராய்ந்து முடிவு காண்பதிலேயே கண்ணுங் கருத் தமாக இருப்பார். அணுவளவு பிழையும் இல்லா திருப்பதற்காக ஆயிரம் தரம் சோதனை செய்ய வேண்டியிருந்தாலும் அயர்வுசோர்வின்றிச் செய்து கொண்டிருப்பார். எந்த கிமிஷமும் ஆராய்ச்சியி லேயே கருத்துடையவராக இருக்த்ார். புதுப் புது 205