பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள் பொருளிலுள்ள அணுக்களின் அதிர்ச்சியே தான் என்ற முடிவுக்கு வந்தார். அப்படியால்ை போது மான அளவு ஒரு பொருளைத் தேய்த்தால் அதி லிருந்து எவ்வளவு உஷ்ணத்தை விரும்புகிருேமோ அவ்வளவு உஷ்ணத்தையும் பெற்றுவிட முடியு மல்லவா ? என்று எண்ணினர்.

அதைச் சோதிக்கும்பொருட்டு பித்த8ளயில் ஒரு பெரிய தொட்டியும் உலக்கையும் செய்தார். அது கம்முடைய நாட்டில் காணப்படும் செக்குப் போல் இருந்தது. தொட்டியில் ஒரு குடம் ஜலத்தை ஊற்றி வைத்துக்கொண்டு இரண்டு குதிரைகளைப் பூட்டி செக்கை ஆட்டினர். செக்கிலிருந்த ஜலமா னது சிறிது சிறிதாகச் சுட ஆரம்பித்துக் கடை சியில் இரண்டுமணி நேரம் சென்றதும் தரதர வென்று கொதிக்க ஆரம்பித்தது. இவ்விதம் நெருப் பின்றி நீரைக் கொதிக்கவைப்பதைக் கண்டு ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இவ்விதமாக ரம்போர்ட் உஷ்ணம் என்பது யாது என்று அறிவதற்கு மற்ற விஞ்ஞானிகள் எண்ணியதுபோல எரியும் வஸ்துக்களை ஆராய் வதைவிட உராயும் வஸ்துக்களை ஆராய்வதே நல் லது என்று முடிவுசெய்து அப்படியே பலவிதமாக ஆராய்ந்து கடைசியில் உஷ்ணம் என்பது காற்றி அலுள்ள வஸ்துவுமன்று, உஷ்ண்மாகும் பொருளி லிருக்கு வரும் அணுக்களும் அன்று, உஷ்ணமா கும் பொருளில் உள்ள அணுக்களின் அசைவே என்று சித்தாங் தம் செய்தார். - 208