பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர் ஜகதீஸ் சந்திர போஸ்

சுமார் 50 வருஷங்கட்குமுன் 1895-ம் வருஷத் தில் ஒருநாள் கல்கத்தா நகர மண்டபத்தில் அறி ஞர்களுடைய கூட்டம் ஒன்று நடைபெற்றது. வங் காள கவர்னர் அக்கிராசனம் வகித்தார். அவர்கள் கூடியிருந்தது அரசியல் விஷயமாக ஆலோசனை செய்வதற்காகவுமில்லை, இலக்கிய விஷயமான பிரசங்கங்கள் கேட்பதற்காகவுமில்லை. விஞ்ஞான போதகாசிரியர் ஒருவர் காட்டும் விஞ்ஞான சோதனை ஒன்றைப் பார்ப்பதற்காகவே.

அப்படி கவர்னர் முதல் சகல பிரமுகர்களும் தங்கள் முக்கியமான வேலைகளை எல்லாம் விட்டு விட்டு வந்து பார்ப்பதக்குத் தகுந்த பிரமாதமான விஞ்ஞான சோதனை யாது? அங் கச் சோதனையைக் காண்பிக்க வந்துள்ள ஐரோப்பியப் பேராசிரியர் யார் ?

அன்று சோதனை காட்டவர்த ஆசிரியர் ஐரோப்பியர் அல்லர். இக்க காட்டிற் பிறந்தவரே. அவருக்கு வயது 37 தான். அங்த நகரத்திலுள்ள கலாசாலை ஒன்றில் கல்வி போதித்துவரும் சாதா ாணமான ஆசிரியர் ஒருவரே.

இப்பொழுதேனும் விஞ்ஞான ஆராய்ச்சியில் இந்தியர்கள் பலர் ஈடுபட்டுப் புதுப்புது விஷயங்க இளக் கண்டுபிடித்து வருகிருரர்கள். ஐம்பது வருஷங் கட்குமுன் விஞ்ஞான ஆராய்ச்சியானது இத்தியா வில் அத்திபூத்த மாதிரியாக இருந்துவந்தது. அந்த நிலைமையில் இந்திய ஆசிரியர் ஒருவர், அறிஞர் 1 of 225