பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர். ஸி. வி. ராமன்

‘உன் பெயரென்ன?’ வி. வி. ராமன், ஐயா!’ பையன் சிறுவனுக இருந்ததும் பதில் உடனுக் குடன் கைரியமாகச் சொன்னதும் ஆசிரியருடைய மனதைக் கவர்ந்தன. அன்றுமுதல் அங்கப் பையன் அவருடைய செல்வக்குழந்தையாக ஆய் விட்டான். அவரைப்போலவே மற்ற ஆசிரியர்க ளும் அவனுடைய படிப்பு விஷயத்தில் அதிகமாக அக்கரை கொண்டார்கள். அவன் பெரிய மனித கை வேண்டுமென்று ஆசீர்வதிக் கார்கள். அப் படியே அவன் அவர்கள் எண்ணியதைவிட அதிக மான கிர்த்திபெற்ற பெரிய மனிதன் ஆகிவிட் டான். அத்தகைய சிறுவன் யார் ? அவன்தான் உலகப் பிரசித்திபெற்ற ஸி. வி. ராமன்.

வர்.லி.வி.ராமன் திருச்சினப்பள்ளியில் 1888-ம் வருஷத்தில் பிறந்தார். அவருடைய தங்தை சந்திர சேகர ஐயர் அந்த ஊரிலுள்ள பாடசாலையில் உபாத்தியாயராயிருந்தார். ராமன் பிறந்ததும் அவ ருக்கு ஆந்திரதேசத்திலுள்ள வால்டேர் என்னும் பட்டணத்தில் கலாசாலை ஆசிரியர் பதவிகிடைத் தது. அவர் கணிதத்திலும் பெளதீக ஸாஸ்திரத்தி லும் அதிகப் பிரியமும் திறமையும் உடையவராக இருந்தார்.

ராமனும் சிறுவயதிலேயே விஞ்ஞான சாஸ்தி ரத்தில் அதிக ஆசையுடையவராக இருந்தார். இது சாதாரணமாகக் காணக் கூடிய விஷயமன்.று. எப் படிச் சிறுபையனுக்கு விஞ்ஞானத்தில் ஆசை பிறக் கும் என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். 255